உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குப்பைக்கு போகும் செண்டுப்பூ: விலை கடும் சரிவு

குப்பைக்கு போகும் செண்டுப்பூ: விலை கடும் சரிவு

நிலக்கோட்டை: விலை சரிவால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் செண்டுப்பூக்கள் (மாட்டுச் செவ்வந்தி), செடிகளில் இருந்து பறிக்கப்படாமல் உள்ளன.

இப்பகுதியில் 125 எக்டேரில் இப்பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. மாலை கட்டுவதற்காக, இங்கிருந்து தமிழகம் முழுவதும் அனுப்பப்படுகின்றன. புரட்டாசியில் முகூர்த்தம் இல்லாததால், விலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. இதனால் பூக்களை பறிக்க விவசாயிகள் தயங்குகின்றனர். நிலக்கோட்டை பூ சந்தையில், மல்லிகை வரத்து குறைந்து, ஒரு கிலோ, 100 முதல் 130 ரூபாய் வரை விற்றது. செவ்வந்தி, சம்பங்கி, கோழிகொண்டை, முல்லை ஆகியவை 100 ரூபாய்க்கு குறைவாக விற்றன. ஒரு வாரமாக, செண்டுப்பூ, ஐந்து ரூபாய்க்கு தான் விற்றது. சந்தைக்கு சென்று வரும் செலவு, எடுப்புக் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்பதால், விவசாயிகள், பூக்களை பறிக்காமல் விட்டனர். இதனால் பூக்கள் கருகி விட்டன. நேற்று முன்தினம், சந்தைக்கு வந்த பூக்கள், விற்காமல் குப்பையில் கொட்டப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ