உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநிலஅளவிலான கரப்பந்து போட்டி: ப.வேலூர் சாம்பியன்

மாநிலஅளவிலான கரப்பந்து போட்டி: ப.வேலூர் சாம்பியன்

கரூர்: கரூரில் நடந்த மாநில அளவிலான கரப்பந்து போட்டியில் ப.வேலூர் அணி முதலிடம் பிடித்தது. கரூர் அருகே ராயனூரில் , ஈழமக்கள் அகதிகள் முகாமில் மாநில அளவிலான கரப்பந்து போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 104 ஈழமக்கள் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இறுதிப்போட்டியில் பரமத்தி வேலூர் அணி 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், பழநி ஒட்டன்சத்திரம் அணி 8 புள்ளிகள் பெற்று இரண்டாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற ப.வேலூர் அணிக்கு பரிசுக்கோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை