உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை அருகே ரயிலை கவிழ்க்க சதி?

கோவை அருகே ரயிலை கவிழ்க்க சதி?

கோவை : 'திருவனந்தபுரம்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க, தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதா' என்று போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். திருவனந்தபுரம்-கோரக்பூர் இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் மாலை 3.15 மணிக்கு கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் ரயில் என்ஜின் மீது கல் ஒன்று விழுந்துள்ளது. இதனால், ரயிலை உடனே, நிறுத்திவிட்டு, டிரைவர் செல்வமுத்து சென்று பார்த்துள்ளார். கல் விழுந்த தகவல் குறித்து போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, போத்தனூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, தண்டவாளம் அருகே மூன்று கிலோ எடையுள்ள சுண்ணாம்பு கல் கிடந்துள்ளது. அதை போலீசார் அப்புறத்தப்படுத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்