உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 நாள் வேலைக்கு இனி மேற்பார்வையாளர் உண்டு

100 நாள் வேலைக்கு இனி மேற்பார்வையாளர் உண்டு

சென்னை:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பணி மேற்பார்வையாளராக ஒருவரை நியமிக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழகத்தில், சென்னை தவிர்த்து, 37 மாவட்டங் களில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் ஒருவரை, பணி இணையாளராக தேர்வு செய்து, அவர் பணிகளை மேற்பார்வையிட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது: ஊராட்சியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிதளங்கள் இருப்பதால், ஒவ்வொரு பணிக்கும் ஒரு பணி இணையாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், தனி நபர் மற்றும் சமுதாயப் பணி ஆகியவை, ஒரே பணித்தளத்தில் நடந்தால், ஒரு பணி இணையாளரே இரு பணிகளுக்கும் போதும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் அனைவரும், பணி இணையாளராக தகுதியானவர்கள். கடந்த ஆண்டுகளில் குறைந்தது, 50 நாட்களாவது, ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தகுதியான பெண் தொழிலாளர்கள் இல்லையெனில், ஆண் தொழிலாளரை நியமிக்கலாம் பணி இணையாளர் பணி துவங்கியது முதல் முடியும் வரை அல்லது ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் ஆகியவற்றில் எது முந்தியதோ, அந்த நாள் வரை, பணியாற்றலாம்; 100 நாட்களுக்கு மேல் பணிபுரியக் கூடாது.பணி இணையாளர், மின்னணு வருகைப்பதிவேடை பராமரித்தல், ஒவ்வொரு நாளும் வருகைப் பதிவு செய்தல், காலை மற்றும் மாலை, மின்னணு வருகைப் பதிவேடு செயலியை பயன்படுத்தி, புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை