உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை பொருள் பழக்கத்திற்கு 1.58 கோடி குழந்தைகள் அடிமை

போதை பொருள் பழக்கத்திற்கு 1.58 கோடி குழந்தைகள் அடிமை

மதுரை:போதைப்பொருளுக்கு, 10 முதல், 17 வயதிற்கு உட்பட்ட 1.58 கோடி குழந்தைகள் அடிமையாகியுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கம்மாளபட்டி கணேசன். திருச்சி -மதுரை நெடுஞ்சாலை சிட்டம்பட்டியில் 2016ல் ஒரு காரை மறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டு, 85 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கணேசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம், 2020ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: போதைப் பொருள் சமூக பிரச்னையாக மாறியுள்ளது. ஆவணங்கள்படி, நம் நாட்டில், 10 முதல், 17 வயதிற்கு உட்பட்ட 1.58 கோடி குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். போதைப்பொருள் பயன்பாடானது நோய் பரவல், தவறான நடத்தை, சமூக சீர்குலைவு, மரணம் மற்றும் தற்கொலைக்கு வழிவகுக்கிறது.இவ்வழக்கில் மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவில் தலையிட தேவையில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்