உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான ரூ.298 கோடி சொத்து முடக்கம்

செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான ரூ.298 கோடி சொத்து முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்திற்கு நிலக்கரி கொண்டு வருவதில் நடந்த முறைகேடு தொடர்பாக, தென்னிந்திய கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 298.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் அனல் மின் நிலையங்களுக்கு சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மாநிலங்களில் இருந்து நிலக்கரி வாங்கப்பட்டு, விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக, தமிழக துறைமுகங்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

ஒப்பந்த பணி

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, தமிழக துறைமுகங்களுக்கு கடல் வழியாக நிலக்கரியை எடுத்து வருவதற்கான ஒப்பந்த பணியை, செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான தென்னிந்திய கார்ப்பரேஷன் நிறுவனம் செய்து வந்தது. இந்நிறுவனம், அப்போதைய மின் வாரிய அதிகாரிகள் உடந்தையுடன் போலி கணக்கு காட்டி, 900 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், 2011 முதல் 2019 வரை நிலக்கரி கொண்டு வருவதற்கு, 234 கோடி ரூபாய் மட்டும் கடல்வழி போக்குவரத்துக்கு செலவு செய்து விட்டு, 1,267 கோடி ரூபாய் கணக்கு காட்டி மோசடி செய்தது தெரியவந்தது.மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்த மின் வாரிய அதிகாரிகள் மற்றும் தென்னிந்திய கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் உட்பட, 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரணை செய்தனர்.

முறைகேடு

கடந்தாண்டு, அந்நிறுவனத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில், அமலாக்கத் துறை நடத்திய சோதனையில், 2011 முதல் 2019 வரை முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் சிக்கின. இதனால், அந்நிறுவனத்திற்கு சொந்தமான, 360 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடலுார் மாவட்டத்தில், அந்நிறுவனத்துக்கு சொந்தமான, 298.21 கோடி ரூபாய் மதிப்பிலான 300 ஏக்கர் நிலத்தை, நேற்று முன்தினம் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mm.perumal
ஜூலை 30, 2024 10:21

அரசியல்வாதிகள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் அவர்கள் செய்வது நாட்டிலிருக்கும் திட்டங்கள் வாயிலாக எவ்வுளவு வருமானத்தை நமக்கு சேர்க்கலாம் என்பதுதானே தவிர மக்களுக்கு நல்லது பண்றேன்னு சொல்லி ஓட்டுக்களை வாங்கி ஜெயித்தபிறகு செய்யற முதல்காரியம் இதுதான். இதற்கு அதிகாரிகளும் உடந்தை.அஏதாவது பிரச்சனைன்னு வந்தால் கைகாட்டிவிட்டு மற்றவரையும் மாட்டிவிட்டுவிட்டு ஏதோ பெயரளவில் 2அல்லது 3மாதங்கள் சஸ்பென்ட் ஆகிற மாதிரி இருந்து விட்டு வேறு இடங்களுக்கு டிரான்ஸ்பர் ஆகி போய்விட வேண்டியது. முதலில் சஸ்பென்ட் என்ற ஒன்றை தூக்கிவிட்டு நேரிடியாக பதவியை விட்டே இந்தமாதிரி ஆட்களை தூக்கினால்தான் மற்றவர்களுக்கு பயம் வரும்.


Gajageswari
ஜூலை 29, 2024 16:55

மின்கட்டணம் உயர் காரணம்


Muthukumar
ஜூலை 29, 2024 15:20

செட்டிநாட்டு குழுமத்திலிருந்து ஐயப்பனை உடனடியாக விடுவித்து


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 10:54

ஒரு காலத்தில் திமுக வுக்கு அதிக தேர்தல் நிதி தந்த குழுமம். நன்றிக் கடனுக்காக விடியல் காப்பார்.


sampath, k
ஜூலை 29, 2024 10:12

Govt. Jobs for heirs of corrupting officers to ve banned and then only corruption can be controlled considerably


S Sivakumar
ஜூலை 29, 2024 07:56

மேல் அதிகாரிகள் கண்காணிக்கும் நிலையில் உள்ளவர்கள் வெட்கப்பட வேண்டும். உடனே தன் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு வெளியே கூட நடமாட முடியாத நிலையில் இருக்க வேண்டும்


sri
ஜூலை 29, 2024 07:55

அண்ணாசாலை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சொத்துக்களை விட்டுவிட்டு கடலூர் சொத்துக்களை முடக்கி என்ன பயன்?


Ravikanth Xxxx
ஜூலை 30, 2024 00:23

நல்ல கேள்வி...


N.Purushothaman
ஜூலை 29, 2024 07:44

இந்த மாதிரி தொழில் மாடல் தான் திராவிட மாடல் ....ஆஹா ..ஓஹோ ...அருமை ...


R.RAMACHANDRAN
ஜூலை 29, 2024 07:21

900 கோடி மோசடியில் அதிகார வர்க்கத்திற்கு எவ்வளவு பங்கு.


N.Purushothaman
ஜூலை 29, 2024 07:13

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் போன்றோர் ஊழல், முறைகேடு லஞ்சத்தில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணியில் இருந்து நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்தும் அவர்களின் வாரிசுகள் குறைந்தபட்சம் ஒரு தலைமுறைக்கு அரசு பணியில் சேரவோ ,அல்லது இட ஒதுக்கீட்டை பயன்படுத்துவதை தடை விதித்து ஏன் சட்டம் இயற்ற கூடாது ? இந்த சட்டம் குறைந்த பட்சம் இருபது ஆண்டுகளுக்கு இருந்தாலே போதும் ...மக்களின் மனநிலை மாற ஆரம்பித்து விடும் ...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை