உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்": அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

"குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்": அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

சென்னை: குடிநீர் பிரச்னை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கோடைக்காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் நீர் இருப்பு நிலவரங்களை கேட்டறிந்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தென் மேற்கு பருவமழை காலத்திலும், மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்க கூடும் என இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தற்போது அணைகளில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். குடிநீர் பிரச்னை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடியாக தீர்வு காண வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து தடைகளின்றி பராமரித்திட வேண்டும். கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம், கிடைப்பது குறைவு என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.150 கோடி ஒதுக்கீடு

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.150 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

A1Suresh
ஏப் 27, 2024 21:38

குடிநீருக்கு பதிலாக டாஸ்மாக் நீரை பயன்படுத்துங்கள் என்று சொல்லாமல் போனார்களே கலிகாலத்தில் எதுவும் நடக்கலாம்


Ramesh Sargam
ஏப் 27, 2024 21:12

ஏம்பா முதல்வரே, ஏறி, குளம், ஆறுகள், குட்டை எல்லாம் வத்தி போச்சு அப்புறம் உங்கள் அதிகாரிகள் எங்கிருந்து மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கமுடியும்? சும்மா "நானும் உள்ளேன் ஐயா" கணக்கில் ஒரு அறிக்கை விடுவது - மக்கள் மீது உண்மையாக அக்கறை இருப்பதுபோல


அப்புசாமி
ஏப் 27, 2024 20:35

முதலில் மழை பெய்யட்டும். இல்லேன்னா குடிநீருக்கு பாவம் அதிகாரிங்க குடிநீருக்கு எங்கே போவாய்ங்க?


J.V. Iyer
ஏப் 27, 2024 18:30

இவர்கள் கட்சிக்காரர்கள் தலை இடாமல் இருந்தால் எல்லாம் நடக்கும் குறுக்கே இருப்பது இவர்கள்தான் என்று மக்கள் முனுமுனுக்கிறார்கள்


பேசும் தமிழன்
ஏப் 27, 2024 18:25

எங்கே இருந்து தீர்வு காண்பது. ??? புதிதாக ஏதாவது அணைகளை கட்டினால் தானே நீரை சேமிக்க முடியும்....அதே பழைய காமராஜர் காலத்து அணைகளை வைத்து கொண்டு காலத்தை ஓட்டினால் ..தண்ணீரை எப்படி சேமிக்க முடியும் ???


பேசும் தமிழன்
ஏப் 27, 2024 18:25

எங்கே இருந்து தீர்வு காண்பது. ??? புதிதாக ஏதாவது அணைகளை கட்டினால் தானே நீரை சேமிக்க முடியும்....அதே பழைய காமராஜர் காலத்து அணைகளை வைத்து கொண்டு காலத்தை ஓட்டினால் ..தண்ணீரை எப்படி சேமிக்க முடியும் ???


Mani . V
ஏப் 27, 2024 18:06

அதுதான் நாம கோதுமை பீரை அறிமுகம் செய்து குடிமகன்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறோமே தலை


Sankar Ramu
ஏப் 27, 2024 17:58

நீங்க டூர் போங்க சார் மக்கள் விதிய மாத்துவது ல நடக்கும்


Barakat Ali
ஏப் 27, 2024 16:49

ஆப்பீசர்ஸ் பிரச்னைகளை சரிபண்ணுங்க


வீரபாண்டி,அலங்காநல்லூர்
ஏப் 27, 2024 16:21

ஆமாங்கய்யா ஏற்கனவே குடிநீரை அறிமுகப்படுத்தி எங்கள் தாகத்தை தணித்தீர்கள் இப்போது வெயில் காலத்தில் நாங்கள் கஷ்டப் படக்கூடாது என்று கோதுமை பீரை அறிமுகப்படுத்தி எங்கள் தாகத்தை போக்கினீர்கள்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ