உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருக்கா வினோத்தால் சிக்கிய பாலியல் தொழில் கும்பல்

கருக்கா வினோத்தால் சிக்கிய பாலியல் தொழில் கும்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் வெளியே எடுத்த பெண் தான், பள்ளி மாணவியரை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள, கவர்னர் மாளிகையான ராஜ்பவன் முன், அக்., 25ல், நந்தனம் எஸ்.எம். நகரைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத்,42, இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார்.இதற்கு முன், தி.நகரில் உள்ள, தமிழக பா.ஜ., அலுவலகத்திலும் பெட்ரோல் குண்டு வீசினார். இது தொடர்பாக கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமினில் வெளியே வந்த போது, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பினருடன் வெளியே வந்தார். இதனால், ராஜ்பவன் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்பதால், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்தனர். அப்போது, கருக்கா வினோத்தை ஜாமினில் வெளியே எடுத்தது யார் என்ற கேள்வி எழுந்தது. கருக்கா வினோத் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை, தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியா, 37 என்பவரின் வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கு சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அது தொடர்பாக, சமீபத்தில், நதியாவிடம் விசாரித்தனர். அப்போது அவரது மொபைல் போனை ஆய்வு செய்தில், அதில், சிறுமியரின் ஆபாச படங்கள் இருந்தன. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், நதியாவின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்தனர். அவர், சென்னை வளசரவசக்கம் ஜெய் நகர், 2 வது தெருவில், பள்ளி சிறுமியரை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக, நதியா, 37 மற்றும் அவரது உறவினர்கள், சுமதி,43, ஜெயஸ்ரீ,43 உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நதியா தன் மகள் வாயிலாக பள்ளி சிறுமியருக்கு வலை விரித்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியது அம்பலமானது. அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

theruvasagan
மே 24, 2024 22:10

நீட் விலக்குக்கு போராடுறது எல்லாம் எப்படிப்பட்ட உருப்படிகள்னு பார்த்து தெரிஞ்சிக்கோங்க மக்களே.


Siva Rama Krishnanan
மே 24, 2024 14:19

மிகுந்த வியப்பாக உள்ளது சிறுமிகளை வைத்து பாலியல் தொழிலை இவ்வளவு நாள் நடத்தியது அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருந்தது இந்த ஆட்சியை விமர்சனம் செய்தாலே உள்ளே தள்ளி நல்ல கவணிப்பு செய்கிறார்கள் ஆனால் கந்து வட்டி கள்ளச்சாராயம் போதை பொருட்கள் விற்பனை கூடவே பாலியலை தொழில் செய்கிறவர்கள் எப்படி செய்கிறார்கள்


ram
மே 24, 2024 13:55

நான் ஒரு சிறுபான்மை ஆளு என்று சொன்னால் இந்த திருட்டு அரசு இவரை கைது செய்யாது


Duruvesan
மே 24, 2024 13:07

தமிழகம் போதை மயம், இப்போது சிறுமியர், மனசு சங்கடமா இருக்கு விடியல் சார் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? எப்போ தான் திருந்துவீங்க? எம்பெருமானே ஈசனே தயவு காட்டும், உமது தமிழினத்தை காக்க வேண்டுகிறேன்


Lion Drsekar
மே 24, 2024 12:53

எல்லாமே கைவிட்டுப்போய்விட்டது யாராலும் எதுவுமே செய்ய முடியாது வந்தே மாதரம்


krishna
மே 24, 2024 12:02

NEET EDHIRPPU PORAALI LATCHANAM SUPER.


கொரட்டூர்குமார்
மே 24, 2024 11:24

ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்குத் தெரியாம இதெல்லாம் நடக்க சான்சே இல்ல. என்.ஐ.ஏ கண்டு பிடிச்சாங்கங்களாம். கடுக்கா வினோத் போட்டுக் குடுத்தானாம். வடிவேல். போலீஸ் காமெடியை மிஞ்சறாங்க கோவாலு.


Srinivasan Krishnamoorthi
மே 24, 2024 10:49

இதற்கு சவூதி அரேபியா பாணியில் உடன் தீர்ப்பு பொது வெளியில் கொடுத்தால் மீண்டும் இப்படி ஒருவர் முயற்சிக்க மாட்டார்


Rajah
மே 24, 2024 12:45

சோழர்கால தண்டனை கொடுப்போம்


Jai
மே 24, 2024 10:26

ஒரு நீட் எதிர்ப்பு போராளி என்று நம்பிய டுமிழன் இன்னும் அவமானப்பட்டதாக தெரியவில்லை.


சந்திரசேகர்
மே 24, 2024 10:01

அடுத்த மாதம் ஜாமீன் கிடைக்கும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை