உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., தி.மு.க., ஊழலால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை: மதுரை ரோடு ஷோவில் அமித் ஷா விமர்சனம்

அ.தி.மு.க., தி.மு.க., ஊழலால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை: மதுரை ரோடு ஷோவில் அமித் ஷா விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளின் ஊழலால் தமிழகம் போதிய வளர்ச்சி பெறவில்லை,'' என்று மதுரை தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அவர் பேசியதாவது: அ.தி.மு.க., -- தி.மு.க., இரு கூட்டணியையும் விட்டுவிட்டு தமிழகம், புதுவையில், 40 தொகுதி களிலும் போட்டியிடுகிறோம். அ.தி.மு.க., - தி.மு.க., ஊழல் காரணமாக தமிழகம் அந்தளவு வளர்ச்சி பெறவில்லை. பிரதமர் மோடி தேசத்தின் பாதுகாப்பு, வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளார். இப்போது அதற்கான சமயம் வந்துவிட்டது. தமிழக மக்களும் மோடியின் கையைப்பிடித்து அவருக்கு ஓட்டளிக்க தயாராகி விட்டீர்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=774afh0x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., மட்டும் தான் தமிழ் வளர்ச்சி, தமிழக வளர்ச்சியில் அக்கறை செலுத்தும். தமிழகத்தின் கவுரவத்தை பாரதத்தில் மட்டுமல்ல; உலகம் முழுதும் பறைசாற்றிக் கொண்டிருப்பவர் மோடி. நான் முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னால் உங்களிடம் தமிழில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. ஆனாலும், அடுத்த தேர்தலில் நான் உங்களிடம் தமிழில் பேசுவேன் என, உறுதி கூறுகிறேன். நீங்கள் சொல்லுங்கள், 'தாமரைக்கு ஓட்டளிப்பீர்களா... 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறச் செய்வீர்களா...' இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்பைடர் மேன் பட்டபாடு

மதுரையில் ரோடு ஷோ நடத்த விமானத்தில் மாலை, 4:30 மணிக்கு மதுரை வந்தார் அமித்ஷா. அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோவிலுக்கு செல்வதாக இருந்தது. மழை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து ரிங்ரோட்டில் உள்ள ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.மதுரையில் ரோடு ஷோ நடத்த ஏற்பாடு செய்திருந்த நேதாஜி ரோடு பகுதிக்கு மாலை 6:42 மணிக்கு வந்தார். 6:44க்கு வேனில் வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசன் மற்றும் நிர்வாகிகளுடன் தாமரை சின்னத்தை அசைத்தவாறு ஓட்டுக்கேட்டார். ரோட்டின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் அவரை மலர் துாவியும், தாமரை சின்னத்தை அசைத்தவாறும் வரவேற்றனர். பார்வையாளர் பகுதியில் ஒரு இளைஞர் 'ஸ்பைடர் மேன்' முகமூடியுடன் நின்றிருந்தார். அவரிடம் சென்ற போலீசார் முகமூடியை கழற்றும்படி கூறி அவரை போட்டோ எடுத்தனர். அவரை பற்றிய விவரங்களை துல்லியமாக விசாரித்தனர். அந்த இளைஞர் வடமாநிலங்களில் இப்படி வரவேற்பு கொடுப்பது சகஜம். அதையே தானும் செய்ததாக கூறினார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். தெற்காவணி மூலவீதியில் மதுரை ஆதின மடத்தின் முன்பாக ஆதினம் மாலை, சால்வையுடன் நின்றிருந்தார். அவரை கையசைத்து வரும்படி அமித்ஷா அழைத்தார். வேன் அருகே சென்ற ஆதினம் மாலையை கொடுக்க, அதை வாங்கிய அமித்ஷா வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசன் கழுத்தில் அணிவித்தார். ஆதினம் கொடுத்த சால்வையை பெற்றுக் கொண்டார். அங்கிருந்து விளக்குத்துாண் பகுதிக்கு இரவு 7:22க்கு சென்று சேர்ந்தார். அங்கு 8 நிமிடங்கள் ஹிந்தியில் பேசினார். அவரது பேச்சை தமிழில் மொழி பெயர்த்தனர். இரவு, 7:33 மணிக்கு விமான நிலையத்திற்கு சென்று, திருவனந்தபுரம் புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Lion Drsekar
ஏப் 13, 2024 12:46

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் வெள்ளைக்காரனோடு கைகோர்த்துக்கொண்டு உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக வாழ்ந்திருக்கலாம் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிப்போனது அவர்களது தியாகங்கள் வந்தே மாதரம்


T.sthivinayagam
ஏப் 13, 2024 12:13

தமிழக காவேரி ஜிஸ்டியை கங்கை கறையில் கரைக்கும் பாஜக


Velan Iyengaar
ஏப் 13, 2024 12:00

மிக மிக கபடத்தனத்துடன் மிக மிக விஞ்ஞான பூர்வமாக தேர்தல்பத்திர நன்கொடை விஷயத்த துஸ்ப்ரோயோகம் செய்தது இப்போது பொது வெளியில் ஆதாரபூர்வ தரவுகளாக வந்து ஊழல் செய்வதில் மிக மிக பெரிய தேர்ச்சி பெற்ற இந்த கேடுகெட்ட கட்சி பிற கட்சிகளின் ஊழல் பற்றி பேச அருகதை பெற்றதாக இருக்குமா ? மேலும் அதிமுக கட்சியுடன் நான்கு மாதங்கள் வரை ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தபோது இந்த விஷயம் தெரியாமல் தான் ஒடி உறவாடினீரா ?? இப்போது இந்த கட்சி குறித்து எப்படி மனசாட்சியுடன் பேச முடிகிறது ??


Velan Iyengaar
ஏப் 13, 2024 12:00

மிக மிக கபடத்தனத்துடன் மிக மிக விஞ்ஞான பூர்வமாக தேர்தல்பத்திர நன்கொடை விஷயத்த துஸ்ப்ரோயோகம் செய்தது இப்போது பொது வெளியில் ஆதாரபூர்வ தரவுகளாக வந்து ஊழல் செய்வதில் மிக மிக பெரிய தேர்ச்சி பெற்ற இந்த கேடுகெட்ட கட்சி பிற கட்சிகளின் ஊழல் பற்றி பேச அருகதை பெற்றதாக இருக்குமா ? மேலும் அதிமுக கட்சியுடன் நான்கு மாதங்கள் வரை ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தபோது இந்த விஷயம் தெரியாமல் தான் ஒடி உறவாடினீரா ?? இப்போது கட்சி குறித்து எப்படி மனசாட்சியுடன் பேச முடிகிறது ?? மக்கள் அத்துணை முட்டாள்களாக நினைத்துக்கொண்டிருந்ததால் தான் இப்போது இப்படி பேசுகிறீர்களா ??


surya krishna
ஏப் 13, 2024 11:16

100% true


venugopal s
ஏப் 13, 2024 10:52

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் ஹரியானா சத்தீஸ்கர் பீகார் குஜராத் போன்ற மாநிலங்களை விட நன்கு முன்னேறி உள்ளது. நீங்கள் உங்கள் வட இந்தியாவை தமிழகம் போல முன்னேற்ற முயற்சி செய்யுங்கள்!


venugopal s
ஏப் 13, 2024 10:49

மதுரையில் நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இருந்து ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் வரை உள்ள மிகவும் குறுகிய சாலையில் இந்த ரோட்ஷோவுக்கு அனுமதி கொடுத்ததே தவறு.ஏற்கனவே அந்த சாலைகள் ஒரு வழிப்பாதை, அதில் ஐம்பது பேர் வந்தாலே பெரிய கூட்டமாகத் தெரியும். எதற்கு இந்த வெட்டி பந்தா இவர்களுக்கு?


Dr. D. Gopalakrishnan
ஏப் 13, 2024 09:56

மத்திய முந்திரி, அவர்களே ஒரு நாட்டின் வளர்ச்சியை ஜிஎஸ்டியை கொண்டு அளவிடலாம் என்று நீங்கள் கூறியதாக ஞாபகம் அப்படியானால் கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்தில் இருந்து பெறப்பட்ட ஜிஎஸ்டி எவ்வளவு என்பதை புள்ளி விவரமாக கூறிவிட்டு தமிழகத்தினுடைய வளர்ச்சியை நீங்கள் மதிப்பிடலாம் கோவை, சென்னையில பேசுரத போல மதுரையில் பேசபடாது


ஆரூர் ரங்
ஏப் 13, 2024 10:39

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஐந்தரை சதவீதமுள்ள தமிழக ஜிஎஸ்டி வருமானமும் அதே விழுக்காடுதான் போதை மருந்துக்கும் ஜிஎஸ்டி இருந்திருந்தால் நீங்கள் கூறுவது போல டாப்பில் வந்திருக்கும்


பேசும் தமிழன்
ஏப் 13, 2024 09:56

அது தான் அண்ணாமலை அவர்கள் தெளிவாக சொல்லி விட்டாரே..... மக்கள் தரிசனம் என்று...... மறுபடியும் ரோடு ஷோ என்று சொல்ல வேண்டாம்


Sampath Kumar
ஏப் 13, 2024 09:19

வளர்ச்சியை பற்றி யாரு பேசுவது என்று விவாசத்தை இல்லை தமிழ் நாடு முன்னரேயே அளவிற்கு பிஜேபி ஆளும் மாநிலம் இல்லை தமிழ் நாடு தான் அதிக வரி கட்டும் மாநிலம் தமிழ் மக்களுக்கு புரியும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை