உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல் ஆளாக பதிவு செய்தார் அஜித்

முதல் ஆளாக பதிவு செய்தார் அஜித்

சென்னை:தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூரில் நடிகர் அஜித் வீடு உள்ளது. திருவீதியம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில், காலை 6:40க்கு ஓட்டளிக்க அஜித் வந்தார். போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்று, ஓட்டுச் சாவடிக்குள் அமர வைத்தனர்.இதைப்பார்த்து, அங்கு வரிசையில் நின்ற முதியவர்கள் சிலர், 'நாங்கள் எவ்வளவு நேரமாக காத்திருக்கிறோம்; அவரை எப்படி ஓட்டுச்சாவடிக்குள் அழைத்துச் செல்லலாம்' என, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். 'அவரை வெளியே நிற்க வைத்தால், ரசிகர் கூட்டம் அதிகமாகி இடையூறு ஏற்படும்' என, போலீசார் கூறினர். இதனால், முதியவர்கள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து அஜித், அந்த ஓட்டுச்சாவடியில் முதல் நபராக ஓட்டளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ