உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛ அண்ணாமலை மெத்தப்படித்த அரசியல் ஞானி; வாயில் வடை சுடுகிறார்: இ.பி.எஸ்., கடும் தாக்கு

‛ அண்ணாமலை மெத்தப்படித்த அரசியல் ஞானி; வாயில் வடை சுடுகிறார்: இ.பி.எஸ்., கடும் தாக்கு

கோவை: ‛‛ தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மெத்த படித்தவர். அரசியல் ஞானி.அவர் வாயிலே வடை சுடுகிறார் '', என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

திட்டமிட்டு

கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: அண்ணாமலை, அ.தி.மு.க.,வை குறை சொல்லி திட்டமிட்டு பேசி உள்ளார். விக்கிரவாண்டியில் அ.தி.மு.க., போட்டியிட்டு இருந்தால் 3வது, 4வது இடம் பிடிக்கும் எனக்கூறியுள்ளார். அவர் மெத்த படித்தவர். மிகப்பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி உள்ளது.

மாயத்தோற்றம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எப்படி நடந்தது என்பது பற்றி நாடே அறியும். அது அண்ணாமலைக்கும் தெரியும். ஏதோ அண்ணாமலை வந்த பிறகு தான் பா.ஜ., வளர்ந்துள்ளதாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். 2014 லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க., வேட்பாளரை விட 42 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்றார். தற்போது, தி.மு.க., வேட்பாளரை விட ஒரு லட்சத்திற்கும் மேல் குறைவான ஓட்டுகளை அண்ணாமலை பெற்றுள்ளார். பிறகு எப்படி பாஜ., வளர்ந்துள்ளது என்கின்றனர். 0.52 சதவீத குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளனர்.

பொய் பேசுகிறார்

அண்ணாமலை தினமும் பேட்டி கொடுக்கிறார். பேட்டி மூலம் தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். பா.ஜ., தலைவராக இருந்து தமிழகத்திற்கு எத்தனை திட்டங்களை மத்திய அரசிடம் பெற்று கொடுத்தார். வாயில் வடைசுட்டு கொண்டுள்ளார். எப்போது பார்த்தாலும் பொய் பேசுகிறார். மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கோவையில் பொய் சொல்லிதான் ஓட்டு பெற்றார். உண்மை சொல்லி பெறவில்லை. மத்தியில் பாஜ., ஆட்சி அமைத்துள்ளதால், 100 நாளில் நிறைவேற்றுவேன் என முன்னர் கூறிய வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றுவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படிப்பட்டவர் தலைவராக இருப்பதால் தான் 300க்கு மேல் தொகுதிகளை பெற்ற பா.ஜ., தற்போது தொகுதிகள் குறைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

எண்ணம் இல்லை

கட்சி விரோத நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டதால் தான் அவர் நீக்கப்பட்டார் . நானோ, வேலுமணியோ நீக்கவில்லை. தொண்டர்கள் தீர்மானப்படி பொதுக்குழு நீக்கியது. ஓபிஎஸ் உள்ளிட்ட 3 பேரை அவரை சேர்க்கும் எண்ணம் இல்லை.

சசிகலா செயல்படுவாரா?

சசிகலா கட்சியில் இல்லை. முன்பு கட்சி பிளவுபட்ட போது, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மனைவி ஜானகி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‛‛ ஜெயலலிதா கட்சிக்கு தலைமை ஏற்று நடத்துவார். நான் உறுதுணையாக இருப்பேன் '' என்று சொன்னார். அந்த நற்பண்பு சசிகலாவிடம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

saravan
ஜூலை 07, 2024 11:25

அவர் அரசியல் ஞானிதான் எடப்பாடி போல் அல்ல


K.n. Dhasarathan
ஜூலை 06, 2024 21:21

அண்ணாமலையை பற்றி கருத்துக்கூறி உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள், அவர் ஒரு பொய்யர், தினமும் பல நூரு போய்களை சொல்லவிடில் தலை தெரிந்துவிடும், சாம்பிளுக்கு ஒன்று மட்டும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன சொன்னார், ? தேர்தலுக்கு பின் இரண்டு திராவிட கட்சிகளும் காணாமல் போகும் என்று. உண்மையில் அவர்தான் காணாமல் போக போகிறார், அவரை ஓரங்கட்ட அனைத்து வேலைகளும் செய்தாகி விட்டது அவர்கள் கட்சியிலே.


sampath
ஜூலை 06, 2024 12:33

3 வருஷம் கால்ல விழுந்து ஆட்சியை அனுபவிச்சிட்டு எந்த கேஸும் தான் மேல வந்தர கூடாதுன்னு இப்ப இன்னொருத்தன் கால்ல விழுந்து கிடக்கிறவங்க வாயால சுடறாங்க


Santhakumar Srinivasalu
ஜூலை 05, 2024 20:11

கட்சியை அழித்தி விட்டு இப்போது பேட்டி கொடுத்து என்ன பயன்?


M Ramachandran
ஜூலை 05, 2024 19:53

யார் வீட்டு பணம்? தன் குற்ற செய்யலை மறைக்க தடுக்க இல்லாத நிலைக்கு தண்டம் மக்கள் வரி பணமா? ஏன் பல நூரி கோடிகள் கொள்ளையடித்த கழக புள்ளிகளையும் சாரயா ஆலையகளய் வைத்து பொழப்பு நடத்தும் பல புள்ளிகலிடம் கேட்டு வாங்க வேண்டியது தானே? அந்த பண்ணதை கொடுத்தால் பராவாயில்லை. கடைய தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைய்யப்பாயா? மக்கள் புத்தி மழுங்கி இந்த திராவிட தகிடு தித்த கும்பலை ஒரு சமயம் மஞ்ச துண்டார் சொன்ன படி சோற்றல் அடித்த பிண்டங்கள் தான் என்பதை நிரூபிக்கிறார்கள் தேர்தெடுத்தாதால் கஷ்ட பட வேண்டியது தான்.


M Ramachandran
ஜூலை 05, 2024 19:52

பழனிச்சாமி ஐயா அவர்களென கண்ணுக்கெதிரேஞ் கட்சியை மதிப்பைய்ய இழந்து கொண்டு வருவதும் தெரிந்து வறட்டு பிடிவாதம் ஏன் செய் கிறீர்கள். பிரிந்து போன தலைவர் களை கூப்பிட்டு மீண்டும் காட்சியாய் பல் படுத்த பாருஙகள் உங்கள் வறட்டு ஜம்பம் மக்களிடம் எடு படாது. உங்களால் ஆஅ தீ மு க்க அழிவதியை மறைந்த தலையயவர்கள் MGR மற்றும் ஜெயலலிதா அம்மையாரின் அஆன்மாக்கள் மன்னிக்காது. அது உங்களை புழலுக்கு அனுப்பிவிடும். ஸ்டலிணை நம்பி சோரம் போய்விடாதீர். ஸ்டாலின் பாடே இப்போ டப்பா டான்சு ஆடிக்கொண்டிருக்கு. உங்களை பலிகடா ஆக்க துடிப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 05, 2024 14:24

கோவையில் பாஜக விடம் தோற்ற அதிமுக தற்போது மீண்டும் திமுகவிடம் தோற்று மேலும் பாஜகவிடம் தோற்று மூன்றாம் இடம் சென்று விட்டது திரு.பழனிசாமி அவர்களே. நீங்கள் தோல்விக்கு பயந்து தான் ஆட்டத்தில் இருந்து விலகி விட்டீர்கள். உங்கள் மீது ஜெயலலிதா பண்ணை வீடு வழக்கு திசை திரும்பிவிடும் என்பதால் நீங்கள் திமுகவோடு சமரசம் செய்து விலகி விட்டீர்கள் என்று மக்கள் நினைக்கின்றனர்.


சாமிநாதன்,மன்னார்குடி
ஜூலை 05, 2024 14:21

அண்ணாமலை தலைவராக வந்ததால்தான் தமிழக பாஜக வளருகிறதோ இல்லையோ ஆனால் எடப்பாடி அதிமுக கட்சிக்கு தலைமையேற்ற பின்புதான் அதிமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.


vadivelu
ஜூலை 05, 2024 14:19

எடப்பாடி சார், நம்ம கட்சி காணாமல் சென்று கொண்டு இருக்கிறது. இனி ஒரு போதும் மைனாரிட்டி வாக்குகள் நமக்கில்லை. இப்படியே போனால், நம்ம தலைவர்கள் பலர் மற்ற கட்சிகளுக்கு சென்று விடுவார்கள். நீங்களும் தி உ க வில் இனைந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டியதுதான்.


Maheesh
ஜூலை 05, 2024 14:08

எடப்பாடி‌ அவர்கள் எதார்த்தமானவராக அரசியலில் இருக்கலாம். ஆனால் திமகவை சமாளிக்கும் திறமை இவரிடம் நிச்சயமாக இல்லை. தோல்விகளை மறைத்து எத்தனை அறிக்கை வேண்டுமானலும் விடலாம்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி