உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகர் - ராதிகா தென்காசி - ஜான்பாண்டியன் பா.ஜ.,வில் 14 வேட்பாளர்கள் அறிவிப்பு

விருதுநகர் - ராதிகா தென்காசி - ஜான்பாண்டியன் பா.ஜ.,வில் 14 வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை:தமிழகத்தில் பா.ஜ., வேட்பாளர்கள், 19 தொகுதிகளிலும்; பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். முதல் கட்டமாக ஒன்பது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, பா.ஜ., மேலிடம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதைதொடர்ந்து, மீதமுள்ள, 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, பா.ஜ., தேசிய பொதுச்செயலர் அருண்சிங் நேற்று வெளியிட்டார். எண் - தொகுதி - வேட்பாளர்1. திருவள்ளூர் - பொன்.வி.பாலகணபதி2. சென்னை வடக்கு - ஆர்.சி.பால்கனகராஜ்3. திருவண்ணாமலை - ஏ.அஸ்வத்தாமன்4. நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்5. திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்6. பொள்ளாச்சி - கே.வசந்தராஜன்7. கரூர் - வி.வி.செந்தில்நாதன்8. சிதம்பரம் (தனி) - பி.கார்த்தியாயினி9. நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்10. தஞ்சை - எம்.முருகானந்தம்11. சிவகங்கை - தேவநாதன் யாதவ்12. மதுரை - ராம சீனிவாசன்13. விருதுநகர் - ராதிகா சரத்குமார்14. தென்காசி (தனி) - ஜான் பாண்டியன் * புதுச்சேரி லோக்சபா தொகுதி வேட்பாளராக ஏ.நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டு உள்ளார். * நடிகர் சரத்குமார், தன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சமீபத்தில், பா.ஜ., உடன் இணைத்தார். அவரின் மனைவியும், நடிகையுமான ராதிகா, விருதுநகரில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை