உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அத்திக்கடவு-அவினாசி திட்டம் அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு

அத்திக்கடவு-அவினாசி திட்டம் அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு

பெருந்துறை:''அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, பா.ஜ., சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும்,'' என்று, மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சோளிபாளையத்தில், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூன்றாவது நீரேற்று நிலையத்தை, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டார். பின் அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர், அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி ஆகியோர், அவினாசி-அத்திக்கடவு திட்டப் பணிகள், 99 சதவீதம் முடிந்து, சோதனை ஓட்டம் நடந்து வருவதாக கூறி உள்ளனர். ஆனால், திட்டம் எப்போது பயன்பட்டுக்கு வரும் என்று கேட்டால், பவானி ஆற்றில் உபரி நீர் வரும்போது வரும் என்கின்றனர்.தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் செல்கிறது. ஆனால், திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதனால், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும், 20ல் பா.ஜ., சார்பில், மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி