உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

பந்தலூர்: இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடுகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தாளூர் பகுதிக்கு இன்று காங்., எம்.பி., ராகுல் மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தார் தாளூரில் உள்ள நீலகிரி கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் காரில் பயணித்த ராகுல் அங்கிருந்த தேவாலய மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் மத்தியில் பேசினார் அப்போது அங்கு குழந்தைகளை கண்ட அவர் காரில் இருந்து இறங்கி சென்று குழந்தைகளுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார் .அவரை தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் கட்சியின் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் வயநாடு எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணன், சித்திக், உட்பட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து அரை கிலோமீட்டர் கார் மூலமாக அருகிலுள்ள தேவாலய கூட்ட அரங்கிற்கு வந்தார். . பின்னர் அங்கிருந்த கூட்டரங்கில் சுமார் ஐந்து நிமிடம் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றினார். இதில் இந்திய தேசம் ஒற்றுமையாக உள்ளது இதனை பா.ஜ.க. அரசு பிளவு படுத்த முயற்சி செய்கிறது, ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்ற கோட்பாட்டில் மக்களை பிரிக்க நினைக்கிறது. பா,ஜ.,அரசு மக்களுக்கு எதிரானது, இந்திய நாட்டின் தலைவர் எல்லா மக்களையும் ஒன்றுஇணைப்பவராக இருக்க வேண்டும் ஆனால் பிரதமர் மோடியோ அவ்வாறு இல்லை என பேசிய அவர் 10 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரிக்கு பிரச்சாரத்தில் ஈடுபட சென்றார். ராகுல் வருகையால் மாநில எல்லை பகுதியில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஏப் 16, 2024 12:40

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பது பழைய பழமொழி, இப்போது பாஜக புகுந்த மாநிலம் உருப்படாது என்பது புதுமொழி!


பேசும் தமிழன்
ஏப் 16, 2024 09:03

நாட்டை பிளவுபடுத்தும் வேலையைப் செய்வது கான் கிராஸ் கட்சி.. அவர்கள் பேசுவது எப்போதுமே பிரிவினைவாதம்.... தேச விரோத கும்பலுக்கு ஆதரவான பேச்சு தான்.... பாரதிய ஜனதா கட்சி என்றாலே தேசபக்தி என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்...... அதனால் புதிதாக கதை கட்ட வேண்டாம்.


Jayaraman Pichumani
ஏப் 16, 2024 02:31

இண்டி கூட்டணி ஆட்களுக்கு கண்ணாடி முன்னாள் நின்று கொண்டு பேசுவது என்பது வழக்கமாகி விட்டது


Kalyanaraman
ஏப் 15, 2024 22:34

சீனாவின் கைக்கூலி, பத்துக்கும் மேற்பட்ட வழக்கில் பெயிலில் இருக்கும் பப்புவின் மற்றுமொரு உளறல்


Jayaraman Rangapathy
ஏப் 15, 2024 22:30

என்ன பேசுவது என்பதே தெரியாமல் பேசும் அரசியல் வாதி


பேசும் தமிழன்
ஏப் 16, 2024 09:04

இவர் அரசியல்வாதி அல்ல.... அரசியல் வியாதி


vijai iyer
ஏப் 15, 2024 20:46

மோடியை ஒரு வெளிநாட்டு தலைவர் தலைவா என்று அழைக்கிறார் இதிலிருந்து தெரியாதா மோடி வழி அருமை உன்னை இந்தியாவில் யாரும் மதிக்க மாட்டார்கள்


Sivaraman
ஏப் 15, 2024 20:32

ஓட்டில் ஏற்படும் பிளவுக்கு இந்த ஒரு தொகுதி வேண்டும்


M Ramachandran
ஏப் 15, 2024 20:27

அப்போ சீனாவிடம் கையேந்தி பிச்சை ஏற்றது நம் நாட்டு முன்னேற்றத்திற்கா? இதற்கு விளக்கம் அளியுங்கள் கார்கே அவர்களெ


N SASIKUMAR YADHAV
ஏப் 15, 2024 20:18

அதற்குதான் அருணாச்சல் பிரதேசத்தில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறீர்களாமே திரு டெல்லி யுவராஜ் அவர்களே


Ramesh Sargam
ஏப் 15, 2024 20:17

மோடி உலக நாடுகளையே அரவணைத்து ஆட்சிபுரிகிறார் அது பொறுக்கமுடியாமல், பிளவுபடுத்தும் முயற்சியில் பாஜக என்று இவர் உளறுகிறார் அது ஒன்றுமில்லை வெய்யிலின் தாக்கம் அதிகம் போல தெரிகிறது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை