உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., 275 இடங்களில் வெற்றி பெறும்

பா.ஜ., 275 இடங்களில் வெற்றி பெறும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''இந்த தேர்தலில் பா.ஜ., 275 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால், மோடி பிரதமர் ஆக வாய்ப்பில்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். ஆனால், கடந்த முறை போல் மெஜாரிட்டிக்கும் கூடுதலான இடங்கள் கிடைக்காது. இந்த முறை 275 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மட்டுமே, தமிழகத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kr1ofl3t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்தாலும், மோடி தான் பிரதமர் என்று உறுதியாக கூற முடியாது. பா.ஜ., - எம்.பி.,க்கள் ஒன்றாக கூடி, பெரும்பான்மையாக யாரை தேர்ந்தெடுக்கின்றனரோ, அவர் தான் பிரதமராக முடியும்.

வளர்ச்சி இல்லை

பிரதமர் மோடியைத் தவிர்த்தும் பல பேர் தகுதி திறமையுடன் உள்ளனர். அவர்கள் யார் என்பதை, இப்போது கூற முடியாது. நான்எம்.பி., ஆக கூட இல்லை. என்னை பிரதமர் ஆக்க விருப்பப்பட்டால், மறுப்பு தெரிவிக்க மாட்டேன். அதே நேரத்தில், எனக்கு பிரதமர் பதவி தாருங்கள் என்று, கேட்கவும் மாட்டேன். மோடி இரண்டு முறை பிரதமராக இருந்திருக்கிறார். ஆனால், என்னை அமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படவில்லை. மோடியிடம் நிதி அமைச்சராக இருப்பதும் கஷ்டம். மோடி கூறுவதற்கெல்லாம் நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் தான் தலையசைப்பதோடு, கேட்ட இடங்களில் கையெழுத்தும் போட்டுக் கொடுப்பர். அதற்கு நான் உடன்பட மாட்டேன். இது மோடிக்குத் தெரியும் என்பதால், எனக்கு நிதி அமைச்சர் பொறுப்பு அளிக்கப்படவில்லை. மோடி தலைமையிலான பத்தாண்டு கால பா.ஜ., ஆட்சியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. நம் நாட்டின் எல்லை பகுதியில் 4,000 சதுர கி.மீ., அளவுக்கு சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால், மோடி அரசு அதை முழுமையாக மறைத்துள்ளது. எல்லா நாடுகளும் மோடியை போற்றி, புகழ்வது போல ஒரு பிம்பத்தை கட்டமைத்துள்ளனர். ஆனால், வெளிநாடுகளோடு இந்தியாவுக்கு நல்ல உறவு இல்லை. அமெரிக்காவும்கூட இப்போது நமக்கு எதிர்ப்பாக மாறி உள்ளது. ஏற்கனவே மோடிக்கு இரண்டு முறை, பிரதமர் வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. இனிமேல் வேறு யாருக்காவது வாய்ப்பளிக்க வேண்டும்.பிரசாரத்தில் மோடி என்ன பேசுகிறார் என்பதை மக்கள் பார்க்கக் கூடாது. பா.ஜ., தேர்தல் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அவர் பேசுவது எனக்கே புரியவில்லை. அப்படி இருக்கும்போது மக்களுக்குஎப்படி புரியும்?ஜாதி வேற்றுமை பார்க்கக்கூடாது. எந்த ஜாதி, எந்த ஊர் என்று வேறுபாடு பார்க்காமல், ஹிந்து என்றால் அனைவரும் ஒன்று என்ற ஒற்றுமை வர வேண்டும்.

விரட்ட வேண்டும்

அதை போல் பொருளாதார முன்னேற்றத்தில், நாட்டு மக்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அதில் அரசு தலையீடு இருக்கக் கூடாது. நாம் சொந்த காலில் நின்று, சீனாவை தோற்கடிக்க வேண்டும். நம் நாட்டில் ஆக்கிரமிப்பு செய்த சீனாவை, திருப்பி விரட்ட வேண்டும். இதுதான் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் இருக்கிறது; அதைத் தான் செய்ய வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு ஒரே வழி, கடல் நீரை குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்துவது தான். அது குறித்து தி.மு.க., அரசு பேச மறுக்கிறது. காவிரி தண்ணீர் என்று கூறி ஏமாற்றுகிறது. இங்கு தண்ணீர் தட்டுப்பாடு என்றதும், உடனே, டேங்கர் லாரி தண்ணீரை நோக்கிச் செல்கின்றனர். பணம் பார்க்கவே, இதை தமிழகத்தில் ஆளும்கட்சியினர் செய்கின்றனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ராகுல், மகளிருக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை அளிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது, அவரின் மக்குத்தனத்தின் வெளிப்பாடு. கல்லுாரியில் 'பாஸ்' பண்ணாதவர் அவர். இந்தியாவில் திறமையான ஒரு அரசியல் தலைவர் யார் என்றால், மம்தா பானர்ஜி தான். திறமை உடையவர்; தைரியம் உடையவர்; நிர்வாக திறன் உடையவர்; கல்வி அறிவு உடையவர்; சிறந்த நிர்வாகி. அவரைப் போன்றவர்களுக்குத்தான் உயர்ந்த பொறுப்புகள் சென்று சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

S.VENKATESAN
மே 08, 2024 21:40

சுப்ரமனியசாமி ஒரு வேஸ்ட்


krishnan
மே 08, 2024 13:41

ஷாந்தி ஷாந்தி


saravan
மே 08, 2024 10:43

ஏன் சுயேட்சையாக நிற்க வேண்டியது தானே


vidhu
மே 06, 2024 09:59

உன்னை மோடிஜி மந்திரி ஆக்கவில்லை என்ற காரணத்தினால் மோடிஜி பிரதமர் ஆக வாய்ப்பு இல்லைன்னு சொல்றியா வயசுக்கு மரியாதை மரியாதை கொடுக்கணும்னு தோணலை எனக்கு


K Sridarran
மே 05, 2024 15:56

பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் மட்டுமே போட்டு இட வேண்டும்ஏனேனில் மாநில கட்சிகள் அதிகமாக உள்ளதுஇதனாள் தேசிய ஒற்றுமை இல்லாமல் போகிறதுமாநில கட்சிகள் தேசிய கட்சிகள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும்


ramani
மே 05, 2024 07:17

இவரு சொல்லிட்டாரா அப்போ பாஜக + இடங்களில் வெற்றி பெறும் மோடிஜிதான் மீண்டும் பிரதமராக வருவார் வேறு வழியில்லை நாட்டை காப்பாற்ற


Velan Iyengaar
மே 04, 2024 21:28

ரொம்போ அதிகம் ஒரு சீட்டு வரும் அவ்ளோ தான் INDIA தான் ஆட்சி அமைக்கும் ப்ராம்ப்ட்டார் இல்லாம மோடி மௌனி ஆகிவிடுவார் எதிர் கட்சி வரிசையில் உட்கார்ந்து கேன்டீனில் வடா பாவ் சாப்பிட்டுவிட்டு போயிடுவார்


Godfather_Senior
மே 04, 2024 20:13

அடேங்கப்பா இதே கருத்தை தான் அண்ணா ஹஜாரேவும் சொன்னார் இப்போ தீதீயை பிரதமராக்கிவிட்டு ஸ்வாமி துணை பிரதமராக வரலாம் என்று கோட்டை காட்டுகிறாரோ என்னவோ ஆனாலும் இவ்வளவு தாராளமாக மாமாதாவை பாராட்டுவதால், ஏதோ உள்குத்து இருக்க வாய்ப்புண்டு ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு, ஸ்வாமியே EVM ஐ குறை சொல்வார் போலும் :=


Bhakt
மே 04, 2024 15:34

இவரை ஒரு பொருட்டாவே யாரும் மதிப்பதில்லை


Barakat Ali
மே 04, 2024 15:14

திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் அப்போது திமுகவின் அடிமைகள் இவர் மீது பாய்ந்து கடித்துக் குதறினர் ஆனால் இப்போது சுவாமி பாஜக தலைமையையும், பிரதமரையும் விமர்சிப்பதால் திமுகவின் அடிமைகளுக்கு மிகவும் பிடித்த மனிதர் ஆகிவிட்டார்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை