உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டியில் பிரசாரம் நிறைவு; வெளியேறிய தமிழக அமைச்சர்கள்

விக்கிரவாண்டியில் பிரசாரம் நிறைவு; வெளியேறிய தமிழக அமைச்சர்கள்

விக்கிரவாண்டி : இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில், இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி, ஏப்ரல் 6ல் உடல்நலக்குறைவால் இறந்ததால், நாளை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.தொகுதியில், 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும், தி.மு.க., - பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.தொகுதியில் உள்ள 2 லட்சத்து 34,178 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக, 276 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 14ம் தேதி துவங்கிய தேர்தல் பிரசாரம் நேற்று மாலை முடிவுற்றது. தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்து, மாலை 5:50 மணிக்கு விக்கிரவாண்டியில் நிறைவு செய்தார். பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி கெடாரில் பிரசாரம் செய்து, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை நிறைவு செய்தார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரத்துாரில் தன் பிரசாரத்தை நிறைவு செய்தார்.தொகுதியில், 25 நாட்களாக முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்த அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட வெளி மாவட்ட அரசியல் கட்சியினர் நேற்று மாலை 6:00 மணிக்கு பின் தொகுதியில் இருந்து வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Jysenn
ஜூலை 09, 2024 15:57

Mission Distribution Over. Over. Over. Over. Money wins by a margin of 65K. All the credit goes to Mr Saha.


raja
ஜூலை 09, 2024 11:49

பணமும், சாராயமும்தான் முடிவு செய்யும் தேர்தல் முடிவு இதற்க்கு தேர்தல் வேறு? போங்கப்பா போக்கத்த பயல்களா... மக்கள் வரிப்பணம் வீண் இதில் வேறு உலகின் மிக பெரிய ஜனநாயகம் வெட்கக்கேடு.. தேர்தல் ஆணையம் தேவையில்லாத ஒரு குறை என்றே தோன்றுகிறது நடக்கும் அக்கிரமங்களுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தை....


duruvasar
ஜூலை 09, 2024 11:17

இந்த மாத விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் விற்பனை உச்சத்தை தொட்டிருக்கும். தொகுதி மக்கள், அரசு இருவருக்குமே மகிழ்ச்சியான தருணம். வாழ்க திராவிட மாடல்.


Yes
ஜூலை 09, 2024 10:22

தேர்தல் வரும் மூன்று மாதங்களுக்கு முன்பே பொது இடங்களில் கட்சிகள் ஓட்டு சேகரிக்கும் வேலைகளை தடை செய்ய வேண்டும். பொது மக்களை சுயமாக சிந்திக்க விடவேண்டும். அவர்கள் சுய சிந்தனைகளை தேர்தலில் மாற்றி ஓட்டுக்களை அபகரிக்க முயல்வர் எவராயினும் வாக்களிப்பை ரத்து செய்து வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும்.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூலை 09, 2024 08:19

ஒவ்வொரு ஊரிலும் பெரிய பந்தல்களைப்போட்டு மக்களைக்கூட்டி நாள் முழுவதும் உட்காரவைத்து Tea, Biscuit கொடுத்து மற்றும் 1000 ரூபாய் கொடுத்து தேர்தலில் ஓட்டை அபகரிப்பதுதான் திராவிட மாடல். மக்களும் வெட்கம் கெட்டவர்கள். மன்னிக்கவும், தமிழ்நட்டு மக்களை வெட்கம் கெட்டவர்களாக மாற்றி வைத்திருப்பதுதான் திராவிட மாடல். நாம் தமிழர்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி