மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
மதுரை: 'தி.மு.க., மூன்றாண்டில் சாதித்ததை கூற முடியுமா' என அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியுள்ளதாவது: தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் மூன்று ஆண்டுகளாக மின்கட்டணம், சொத்துவரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி உள்பட கட்டணங்கள் உயர்ந்துள்ளன. பால், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அத்துடன் கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை தவிர, தி.மு.க., அரசு எந்த புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அதற்கான நிதியும் ஒதுக்கவில்லை. 2019ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது காவிரிப் பிரச்னையில் பார்லியில் 37 எம்.பி.,க்கள் 22 நாட்கள் போராடி காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டினோம். கர்நாடகாவில் தங்களது குடும்பத் தொழில்களைப் பாதுகாக்க, தி.மு.க., தமிழகத்திற்குஉரிய பங்கு நீரைப் பெறாமல் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதித்தது தெரியவில்லையா.காவல்துறை புள்ளி விவரங்களைப் பார்த்தாலே, தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கொலை, கொள்ளை, பாலத்காரம், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தை போதைப் பொருட்களின் கேந்திரமாக மாற்றியது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. ஆன்லைன் சூதாட்ட கும்பலிடமிருந்து ரூ. 509 கோடியை தி.மு.க., தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது.நங்கநல்லுார் கூட்டுறவு கட்டட சங்கத்தில் நடைபெற்ற மோசடியை பல சமூக ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆட்சி மாறும், காட்சி மாறும் என்பதை நினைவூட்டுகிறேன். அப்போது அந்தப் புகார்கள் துாசி தட்டி விசாரணை நடத்தப்படும். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை விமர்சனம் செய்யாமல் உங்கள் சாதனைகளைக் கூறுங்கள். தனிநபர் பற்றி விமர்சனத்தை விட்டு விட்டு இனியாவது திருந்துங்கள். இல்லையெனில் திருத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கிறேன்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1 hour(s) ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago