உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து சேர்த்த வழக்கு விஜயபாஸ்கர், மனைவி ஆஜர்

சொத்து சேர்த்த வழக்கு விஜயபாஸ்கர், மனைவி ஆஜர்

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு விசாரணைக்கு விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு நேற்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகினர் வழக்கு விசாரணை நடைபெற்றது.இதற்கிடையில், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ள குற்ற பத்திரிக்கை நகல்கள் மற்றும் அதற்குண்டான ஆதாரங்கள் அனைத்தையும் தங்களிடம் ஒப்படைக்கிடுமாறு, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அமலாக்கதுறைக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாங்கள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை நகல்கள் மற்றும் ஆதாரங்கள் கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளது.இந்த வழக்கு விசாரணையை நீதிபதி பூர்ணஜெய்ஆனந்த் ஜூன் மாதம் 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதேபோன்று அமலாக்கத்துறை மீண்டும் புதிதாக மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி