உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள்: இ.பி.எஸ்., கண்டனம்

திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள்: இ.பி.எஸ்., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகி உள்ளது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டி உள்ளார்.இது குறித்து, எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்னையால் ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது. சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை. எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்.,கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 02, 2024 21:25

இவர கண்டாலே எரிச்சல் வருகிறது, செத்து போன திமுக விற்கு இவரது கேவலமான புத்தியால் மறுபடி ஆட்சியில் உட்காரவைத்து தமிழகத்தை கொள்ளையடிக்க விட்டார். இவரும் ஹிந்துக்களுக்கு துரோகிதான்.


MADHAVAN
ஜூலை 02, 2024 18:33

பச்சை / சிவப்பு கலர் னு நீங்க பண்ணுனதுதான் எடப்பாடி, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது உங்க வேலைதான்,


MADHAVAN
ஜூலை 02, 2024 18:32

எடப்பாடி மாதிரி சாதி அரசியல் யாராலும் பண்ணமுடியாது, கொங்குமண்டலம் மட்டும் போதும் னு நினைச்சியா பழனிசாமி, மற்ற ஆத்திகளும் தமிழகத்தில் இருக்கு, ன் சாதிக்காரனுங்களுக்கு அமைச்சர் பதவி, உன் சாதிகாரங்களுக்கு உயர்பதவின்னு எல்லோருக்கும் நீ குடுத்த, மக்கள் உனக்கு நல்ல தூக்கி கொடுத்துட்டாங்க,


Apposthalan samlin
ஜூலை 02, 2024 17:57

ரெண்டு ஊர் பசங்க இடையில் சண்டை இதில் ஜாதி எங்க இருந்து வருகிறது


Palanisamy Sekar
ஜூலை 02, 2024 16:23

தேர்தலுக்கு முன்னர் நன்கு குறட்டை விட்டு தூங்கிவிட்டு தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சியாக பணியாற்றுகின்றாராம். இதற்க்கெல்லாம் ஒரு அறிக்கை. நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் இந்த நாட்டை கெடுத்ததுடன் தானும் தான் சார்ந்த கட்சியையும் கெடுத்தார் என்கிற பாட்டுக்கு மிகவும் பொருத்தமானவர் இவர்தான் நம்ம எடப்பாடியார்தான்.


Rajah
ஜூலை 02, 2024 15:12

உங்கள் கட்சியிலும் இருப்பதாக செய்திகள் வருகின்றதே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை