உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்நாடு அதிவிரைவு ரயிலின் 48-ம் ஆண்டு கொண்டாட்டம்

தமிழ்நாடு அதிவிரைவு ரயிலின் 48-ம் ஆண்டு கொண்டாட்டம்

சென்னை:சென்னை சென்ட்ரல் - புதுதில்லி இடையே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கத் தொடங்கி 48-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. தென்னிந்தியாவையும், வடஇந்தியாவையும் இணைக்கும் இந்த அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 1976ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி துவங்கப்பட்டது.பல ஆண்டுகளாக சென்னைக்கும், புதுடில்லிக்கும் இடையே இயங்கி வரும் இந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், 2,182 கி.மீ., தூரத்தை 10 நிலையங்கள் வழியாக கடக்கிறது.இந்த மைல்கல் சாதனையை குறிக்கும் வகையில், டாக்டர் எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.சென்னை கோட்ட முதுநிலை வணிக மேலாளர், ரயில் நிலைய இயக்குனர், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பயணியர் கேக் வெட்டி கொண்டாடினர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பின் புதுடில்லி புறப்பட்ட ரயிலை அவர்கள் வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ