மேலும் செய்திகள்
நா.த.க., சார்பில் சவுராஷ்டிரா மாநாடு
11 minutes ago
கையெழுத்து பெற்றும் ரேஷன் வழங்கலாம்; தாயுமானவர் திட்டத்தில் சலுகை
22 minutes ago | 1
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
5 hour(s) ago
கோவை:சவுக்கு சங்கர் மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் ஒரு யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி தொடர்பாக, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இதற்கிடையே சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், தமிழர் முன்னேற்ற படையை சேர்ந்த வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது சென்னை போலீசார் தனித்தனியாக வழக்குபதிந்தனர்.இந்த, 2 வழக்குகளிலும் சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் கோவை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து சென்றனர்.அங்கு சென்னை தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க, போலீசார் கேட்டுக்கொண்டனர். இருதரப்பு வக்கீல்களும் மாறிமாறி வாதங்களை முன்வைத்தனர்.சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இதையடுத்து, அவரை பாதுகாப்புடன் போலீசார் நேற்று காலை, 9:30 மணியளவில் கோவை அழைத்து வந்தனர். பின் அவரை மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
11 minutes ago
22 minutes ago | 1
5 hour(s) ago