உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளை அறிக்கை தராமல் முதல்வர் வெளிநாடு பயணம்: அண்ணாமலை பேட்டி

வெள்ளை அறிக்கை தராமல் முதல்வர் வெளிநாடு பயணம்: அண்ணாமலை பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ‛‛ முதல்வர் ஸ்டாலின், வெள்ளை அறிக்கை ஏதும் கொடுக்காமல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார் ''என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.கோவையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: டாஸ்மாக்கிற்கு வர வேண்டிய வருவாயில் வெளிப்படைத்தன்மை இல்லை என சிஏஜி கூறியுள்ளது. இந்த அறிக்கை எதிர்பார்த்த ஒன்று தான். போதை அதிகமாக வேண்டும் என்று கஞ்சா, கள்ளசாராயத்தை நோக்கி செல்கின்றனர். டாஸ்மாக் நிறுவனமே இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குகிறது. மது குறித்து அமைச்சர் துரைமுருகன் சொன்னது உண்மைதான். இதற்கு தமிழக அரசே காரணம்.

நகைச்சுவை

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுவின் தரம் குறித்து சோதிக்கப்பட வேண்டும். அமைச்சரின் கருத்தை நகைச்சுவை என கடந்து செல்லாமல், உண்மையை பரிசோதனை செய்ய வேண்டும். தி.மு.க., அமைச்சரவையில் உள்ள பிரச்னைகள் சட்டசபையில் தெரிவதாக நாங்கள் கருதுகிறோம்.சென்னையில் சுகாதாரம் அதளபாதாளத்தில் உள்ளது. இதனை பற்றி சுகாதார அமைச்சர் உட்பட யாரும் பேசுவது கிடையாது. சுகாதாரமின்மையால் சென்னையி்ல் எத்தனையோ பேர் எத்தனையோ நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது பற்றி சட்டசபையில் பேசுவது கிடையாது. வேறு விஷயங்களை பேசுகின்றனர்.

வெள்ளை அறிக்கை

முதல்வர் வெளிநாடு செல்வது தவறு இல்லை. ஆனால், தமிழக முதல்வர் வெள்ளை அறிக்கை கொடுக்காமல் வெளிநாடு செல்கிறார். முதல்வர் தனிப்பட்ட பயணமாக இருந்தால் சந்தோஷம். ஆனால், அரசு அதிகாரிகளுடன் செல்லும் போது மக்கள் கணக்கு கேட்கின்றனர். 3 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட வெளிநாடடு பயணங்களால் எந்த நன்மையும் இல்லை. எதுவும் வராமல் வெளிநாட்டு பயணம் ஏன் என்பது சாதாரண மனிதனின் கேள்வியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

INDIAN
ஜூலை 01, 2024 15:54

நாட்டில் ஏற்பட்ட எத்தனையோ பிரச்சினைகளுக்கு ஒரு வெள்ளை அறிக்கையும் இதுவரை மோடி கொடுத்ததில்லை.


Vayalur Visu
ஜூன் 30, 2024 22:47

கொத்தடிமை இடம் வேறு enண்ணா எதிர்பார்க்க mudiyum


S. Narayanan
ஜூன் 30, 2024 22:10

இங்கு இருந்தால் நொண்டி நோ ங்கு எடுத்து விடுவார்கள் என்ற பயம் தான் காரணம்


S. Narayanan
ஜூன் 30, 2024 22:07

தமிழக மக்களின் வாழ்க்கை மற்றும் அன்றாட பாதிப்பு பற்றி கவலை இல்லாத ஒரு முதல் தமிழ் நாட்டுக்கு தேவையா


Raj Kamal
ஜூன் 30, 2024 20:55

அந்த சாதாரண மனிதர்களுக்கு சாதாரண மனிதர்களாகிய நாங்கள் பதில் சொல்லிகொள்கிறோம், நீங்கள் கவலை படவேண்டாம்


Devanand Louis
ஜூன் 30, 2024 19:27

மதுரை திருப்பரங்குன்றம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தோப்பூர் கிராம வீ எ ஓ அலுவலகஊழியர்கள் செய்யும் கொடுமையான லஞ்சம்வாங்கும் கொள்ளைக்கூடாரம் - பட்டா விண்ணப்பங்களை வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் , பின் வேண்டாத டாக்குமெண்டுகளை கேட்டு காலம் தாழ்த்தி பெரிய தொகையை கேட்டு லஞ்சம்வான்ங்குகிறார்கள் - லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை தேவை .தினமலரின் நடவடிக்கை மற்றும் உதவிகள் தேவை .


M Ramachandran
ஜூன் 30, 2024 19:18

தப்பித்தோம் பிளைத்தோமென்று ஓடுபவரய் நிறுத்த பார்கிறீர்களெ. நாங்கள் ஏமாறுவோமா?


Murugesan
ஜூன் 30, 2024 19:08

மக்கள் பணத்தை கொள்ளையடித்து வாழுகின்ற கேடுகெட்ட திராவிட அயோக்கியர்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை