உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புடன் 10 ஆண்டுகால மக்கள் தொகை கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். என பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.கடிதத்தில் அவர் மேலும்தெரிவித்து இருப்பதாவது: அரசியல்அமைப்பு சட்டப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியிலில் வருகிறது. நாட்டின் வளர்ச்சி அனைத்து சமூகத்தையும் சென்றடைய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். சமூகப்பொருளாதார வளர்ச்சியை இலக்காககொண்டு கொள்கைகளை வகுக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் எப்போதும் அடிப்படையாக இருக்கும். எனவே சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும். முன்னதாக கடந்த 20.10.2023 அன்று இது சம்பந்தமாக கடிதம் எழுதி இருந்ததையும், அப்போதும் சாதி வாரி கணக்கெடுப்பு , மக்கள் தொகைகணக்கெடுப்பையும் ஒன்றாக மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலும் இணைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 08:47

எடப்பாடி கடிதம் எழுதிய போது கசந்தது..... இப்போது இவர் கடிதம் எழுதும் போது.... இனிக்கிறது.


பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 08:45

அப்போ திராவிட மாடல் ஆட்கள் தாங்கள் ஜாதியை ஒழித்து விட்டோம் என்று கூறியது எல்லாம் பொய்யா கோபால் ????


அருண் பிரகாஷ் மதுரை
ஜூன் 26, 2024 23:16

எப்போதும் போல கடிதம்..படித்தவுடன் கிழித்து விடவும்.


தாமரை மலர்கிறது
ஜூன் 26, 2024 22:57

மக்களை சாதிவாரியாக செங்குத்தாக பிளந்து, சாதி சண்டைகளை தொடக்கி வைக்க ஒரு குள்ளநரி ஆசைப்படுகிறது.


Mohanakrishnan
ஜூன் 26, 2024 22:32

If this superman knows tamil or English let his team read their manifesto once again and talk sense instead talking thiruttu model nonsense


theruvasagan
ஜூன் 26, 2024 22:13

குத்தல் குடைச்சல் தரும் கள்ளச்சாராய விவாகாரத்தை பின்னுக்குத் தள்ள இந்த முயற்சி. ஆனால் பலன் தராது


theruvasagan
ஜூன் 26, 2024 22:10

இட ஒதுக்கீடுஆரம்பித்ததிலிருந்து பத்தாண்டுகளுககு ஒரு முறை சென்சஸ் உடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தியிருக்க வேண்டும். 60 வருஷம் ஆண்ட கான்கிரஸ் அதை ஒரு முறையாவது செய்ததா. அப்போதல்லாம் ஏன் வற்புறுத்தவில்லை குருட்டாம் போக்காகத்தானே இதுவரை இட ஒதுக்கீட்டை அமல் படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்.


ALWAR
ஜூன் 26, 2024 22:07

பிட்சை எடுக்கும் .....


Naga Subramanian
ஜூன் 26, 2024 22:06

சாதிவாரி பற்றி பேச ஆரம்பிச்சுட்டாரு, சர்வாதிகாரி


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 21:49

எப்படி பந்தை ஒன்றியம் பக்கம் தள்ளி உட்டேன் பார்த்தீங்களா ?? உயர்சாதி மக்களுக்காகத்தான் ஆட்சி நடத்துறேன்னு ஒரு பய கண்டுபுடிக்க முடியாது .....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ