உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தயாநிதியை எதிர்த்து போட்டி: பிரேமலதாவுக்கு அறிவுரை

தயாநிதியை எதிர்த்து போட்டி: பிரேமலதாவுக்கு அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மத்திய சென்னையில் தயாநிதியை எதிர்த்து போட்டியிட வேண்டும் என, பிரேமலதாவிற்கு, அ.தி.மு.க., நிர்வாகிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.,விற்கு, மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நடுத்தர மற்றும் குடிசைப்பகுதி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இந்த தொகுதி உள்ளது. ஆங்காங்கே உயர்தட்டு மக்களும் வசிக்கின்றனர். தி.மு.க., பல முறை வெற்றி பெற்றும், இத்தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை.இத்தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக தயாநிதி மீண்டும் களமிறங்கியுள்ளார். அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளராக தே.மு.தி.க., சார்பில் விருகம்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ., பார்த்தசாரதியை களமிறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், விஜயகாந்த் மறைவிற்கு பின் போட்டியிடுவதால், பிரேமலதாவிற்கு மக்கள் மத்தியில் அனுதாபம் கிடைக்கும். பா.ஜ., சார்பில், வினோஜ் செல்வம் போட்டியிடுவதால் ஓட்டுக்கள் பிரியும். அதனால், பிரேமலதா எளிதாக வென்றுவிடலாம் என, அவரை சந்தித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கருத்துக்கூறி உள்ளனர்.பிரேமலதா போட்டியிடுவதால் கட்சிக்கும் எழுச்சி கிடைக்கும் என, தே.மு.தி.க., நிர்வாகிகளும் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kannan
மார் 22, 2024 16:10

கூட்டனி கட்சிகளுக்கு ஒதுக்கப்டும் தொகுதிகளில், அஇஅதிமுக தொண்டர்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும்


Bharathi
மார் 22, 2024 12:23

அப்பதான் ரெண்டு பக்கததுலேயும் துட்டு கறந்துக்கலாம் பண பேராசை போகாது போல


periyasamy
மார் 22, 2024 11:44

valthukal akka


yts
மார் 22, 2024 11:00

டெபாசிட் கிடைத்தால் பெரிய விஷயம்


தமிழ்
மார் 22, 2024 10:12

இந்தமாதிரி ஐடியாவெல்லாம் இவங்களுக்கு யார் கொடுக்குறது.


RAMAKRISHNAN NATESAN
மார் 22, 2024 09:15

அம்மணி மேல அதிமுகவுக்கு என்ன கோபம் ????


subramanian
மார் 22, 2024 08:01

பிரேமலதா வெற்றிபெற வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்