உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்க்சிஸ்ட் கட்சிக்குள் துவங்கியது போட்டி

மார்க்சிஸ்ட் கட்சிக்குள் துவங்கியது போட்டி

சென்னை,:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பதவியைக் கைப்பற்ற, அக்கட்சிக்குள் போட்டி துவங்கியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். ஒருவர் இரு முறை அதாவது 6 ஆண்டுகள் மாநிலச் செயலராக இருக்க முடியும்.தற்போது மாநிலச் செயலராக இருக்கும் பாலகிருஷ்ணன் 2018 பிப்ரவரி 20ல் துாத்துக்குடியில் நடந்த கட்சியின் மாநாட்டில் மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடந்த 2022 ஏப்ரல் 1ல் மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் மாநில மாநாட்டில் இரண்டாவது முறையாக பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் 2019, 2024 லோக்சபா தேர்தல்கள், 2021 சட்டசபைதேர்தலை, மார்க்சிஸ்ட் எதிர்கொண்டது.24-வது மாநில மாநாடு, 2025 ஜனவரி 3, 4, 5 தேதிகளில் விழுப்புரத்தில் நடக்கவுள்ளது. இதில் மாநிலச் செயலர் தேர்தல் நடக்கவுள்ளது. பாலகிருஷ்ணனின் பதவிக் காலம் முடிவதால், அடுத்து யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.மாநிலச் செயலர் பதவியைக் கைப்பற்ற மூத்த தலைவரான சி.ஐ.டி.யு., மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், மத்திய குழு உறுப்பினர்கள் வாசுகி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர், மாநிலச்செயலர் போட்டியில் இருப்பதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக அக்கட்சி நிர்வாகி, 'கட்சி விதிகளின்படி புதிய மாநிலச்செயலர் தேர்வு செய்யப்படுவார். சட்டசபையில் கட்சியின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும்.'அதற்கு 2026 சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற சவால், புதிய மாநிலச் செயலருக்கு உள்ளது. கம்யூனிஸ்ட் என்றாலே போராட்டம்தான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Sasikumar Yadhav
ஆக 11, 2024 04:54

கோபாலபுரத்துக்கு யாரு அதிகமாக விசுவாசத்தை காட்டுகிறார்களோ அவன்களே தலைமை பதவிக்கு


கண்ணன்
ஆக 10, 2024 06:46

ஹி ஹி ஹி…


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை