உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில தலைவரை கொல்ல சதி: ஹிந்து முன்னணி பகீர் புகார்

மாநில தலைவரை கொல்ல சதி: ஹிந்து முன்னணி பகீர் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : 'ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதை போலீஸ் அதிகாரிகள் மறைக்க முற்பட்டுள்ளனர்' என, ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலர் கிஷோர்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

சில நாட்களுக்குமுன், பழனியிலுள்ள பா.ஜ., அலுவலகத்துக்கு ஒரு பதிவு தபால் வந்தது. அதில், சிலர் பயங்கரவாத பயிற்சி எடுப்பதாகவும், முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த பத்து பேருக்கு பயிற்சி கொடுத்து, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5m82gr7z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், உண்மையை மறைக்க முற்பட்டுள்ளனர். கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவல் உண்மை அல்ல; வெற்று மிரட்டலுக்காக மட்டும் எழுதி உள்ளனர் என, பிரச்னையின் தீவிரத்தை நீர்த்துபோகச் செய்துள்ளனர்.சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை. அது துரதிர்ஷ்டவசமானது. இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு உணரவில்லை. ஹிந்துக்களின் பாதுகாவலராக விளங்கும், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மறைப்பது சரியல்ல; கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்னையை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
ஆக 16, 2024 17:16

உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா?


RAMAKRISHNAN NATESAN
ஆக 16, 2024 11:41

கவலையே பாத்தீங்க ..... ஹிந்துக்களின் பாதுகாவலர் மோடி பார்த்துக்குவாரு .....


pmsamy
ஆக 16, 2024 10:09

அறிவு இல்லாத கூட்டம் அடித்துக்கொண்டு இறப்பது நல்ல விஷயமே


Sampath Kumar
ஆக 16, 2024 08:13

ஏன்டா மாநிலத்தலையுடன் நின்று விட்டர்கள் மத்திய ஜிகளையும் சேர்த்து சொல்லவேண்டியது தானே என்னத்தையாவது உருட்டி கிட்டயே இல்லை என்றால் பொழுது போகாது போல


sridhar
ஆக 16, 2024 08:35

சீ , உங்க ஆட்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடவில்லையா , இருநூறு ரூபாய்க்கு எவ்வளவு கூவணுமோ அவ்வளவு மட்டும் கூவு …


Yuvaraj Velumani
ஆக 16, 2024 09:01

பிரியாணிக்கு அலைந்தால் பங்களாதேஷ் நிலைமை தன வரும்


M.LAKSHMANAN
ஆக 16, 2024 09:52

200


V RAMASWAMY
ஆக 16, 2024 08:04

Evil comes to evil. Those who practice and indulge in such crimes should understand that they will be caught one day and meet with similar ends as they committed to others. Films should immediately stop showing excess violence, fighting scenes glorifying villains unlike in old films where villains were shown as bad persons getting severe punishments. Identically, Schools must inculcate Moral Instruction classes right from the tender age of kids, say from KG levels. These are all Must for citizens not going towards envy, greed leading to fights and other crimes.


N.Purushothaman
ஆக 16, 2024 07:46

சமூக நீதியை காப்பாற்ற காவல் துரை இப்படித்தான் செயல்படும் ...ஏன்னா இது ஒரு விதமான மாடல் ஆட்சி ...


Anantharaman
ஆக 16, 2024 07:44

இன்னமும் திமுக அரசை நீடிப்பது மாபெரும் குற்றம்


Kalyanaraman
ஆக 16, 2024 07:40

போதை மருந்து கடத்தபவர்கள், பிரிவினை வாதம் பேசுபவர்கள் - செயல்படுபவர்கள் திமுக பிரமுகர்கள். அவர்கள் மீது திமுக அரசே எப்படி நடவடிக்கை எடுக்கும்? ஏற்கனவே காவலர் மில்டன் சுடப்பட்டதை பற்றி எந்த விசாரணையும் இல்லை. வெடிகுண்டு வெடித்தால் சிலிண்டர் வெடிப்பு. வெறும் ஓட்டுக்காக மட்டுமே பகிரங்கமாக இத்தனையும் செய்ய முடியாது. இதில் வேறு ஏதோ உள்ளது.


Ray
ஆக 16, 2024 07:39

ஆம் ஒருவருக்கு ஒருவரை ஆகாது என்பது யுக யுகமாய் தொடர்வதுதானே நீண்டு கொண்டே போகும் ஆகாது என்பது ஏனோ மாறததாகி - மாற்ற முடியாததாகி விட்டது.


Kasimani Baskaran
ஆக 16, 2024 05:50

கஞ்சா கடத்தி பிடிபட்ட கோஷ்டியையே யோக்கியமான கோஷ்டி என்று ஒரு மாயையை உருவாக்க முயல்கிறார்கள். இணையமெங்கும் திராவிடர்கள் மட்டுமல்லாது டிஜிட்டல் கிரியேட்டர்கள் என்று சொல்லப்படும் உடன் பிறப்புக்கள் முட்டுக்கொடுப்பதில் அதி தீவிரம் காட்டுகிறார்கள். காஷ்மீர் போலவோ அல்லது மேற்கு வங்கம் போலவோ தமிழகம் ஆகாமல் இருக்க இந்த அரசு வீட்டுக்கு அனுப்படவேண்டும்.


பாமரன்
ஆக 16, 2024 11:44

இந்த அரசு மட்டுமல்ல... எல்லா அரசில் இருப்பவர்களும் சாயங்காலமானா வூட்டுக்குதான் போறாய்ங்களாம்... அடுத்த முறை நல்லா அழுவீங்களாம் காசி...


மேலும் செய்திகள்