உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

வானுார்: ஆரோவில் அறக்கட்டளை சார்பில் நடந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அறக்கட்டளை சார்பில், 78வது சுதந்திர தின விழா மற்றும் அரவிந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி மொரட்டாண்டி பல்மைரா கிரிக்கெட் மைதானத்தில, கடந்த 15ம் தேதி முதல் 17 வரையில் நடந்தது.போட்டியில் 16 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் விளையாடினர். இறுதிப்போட்டியில், கலைவாணன் நகர் அணி மற்றும் ராவுத்தன்குப்பம் அணியும் மோதின. இதில், கலைவாணன் நகர் அணி முதலிடத்தையும், ராவுத்தன்குப்பம் அணி இரண்டாம் இடத்தை யும் பிடித்தன.பரிசளிப்பு விழாவில், புதுச்சேரி ஐ.ஜி., அஜித்குமார் சிங்கலா, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில், ஆரோவில் அறக்கட்டளை இயக்குனர் சொர்ணாம்பிகா, புதுச்சேரி கடலோர காவல்படை டி.ஐ.ஜி., சுரேந்திர சிங் டசிலா ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர்.முதல் பரிசாக 20 ஆயிரம், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற 14 அணிகளுக்கும் தலா 5,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் வெங்கடேசன், காமாட்சி, வழக்கறிஞர் உதயகுமார், நரேஷ்ராம், ஆடிட்டர் செல்வ ராஜ், புதுச்சேரி தமிழ் சங்க தலைவர் முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ