உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 63 ஆக உயர்ந்தது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 63 ஆக உயர்ந்தது

கள்ளக்குறிச்சி,:கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 63 ஆக உயர்ந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இவர்களில் நேற்று முன்தினம் வரை 59 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கருணாபுரம் ஏசுதாஸ்,35; ராமநாதன்,62; சேலம் அரசு மருத்துவமனையில் கருணாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்,26; சம்பத் மனைவி சரசு,52; ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் வரை 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 40 பேர், சேலம் 11 பேர், விழுப்புரத்தில் 2 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். தற்போது கள்ளக்குறிச்சியில் 48 பேர், புதுச்சேரியில் 9 பேர், சேலத்தில் 19 பேர், விழுப்புரத்தில் 2 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 79 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி