உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதம் பாதிப்பு சிகிச்சைக்கு விரைவில் பிரத்யேக கிளினிக்

பாதம் பாதிப்பு சிகிச்சைக்கு விரைவில் பிரத்யேக கிளினிக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரில், 10.12 சதவீதம் பேருக்கு பாத பாதிப்பு இருப்பதால், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அதற்கான பிரத்யேக கிளினிக் துவக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை எழும்பூரில், 'பாதம் பாதுகாப்போம்' திட்டத்தில், நீரிழிவு நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை கண்டறிவதற்கான பயிலரங்கம் நேற்று நடந்தது. இதில், டாக்டர்கள், மக்களை தேடி மருத்துவ கள பணியாளர்கள் உள்ளிட்ட, 150 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முதன்மையான நோய்

இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:நீரிழிவு நோய், முதன்மையான நோய்களில் ஒன்றாக உள்ளது. நீரிழிவு நோயாளிகள் பாத பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது அதிகரித்துள்ளது. இதனால், பாத பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, 2022ல் பாதம் பாதுகாப்போம் திட்டம் துவக்கப்பட்டது.தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 1.05 கோடி ரூபாய் மதிப்பில், அதற்கான மையம் துவக்கப் பட்டது. அதில், 1.65 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ததில், 16,777 பேர் என, 10.12 சதவீத நீரிழிவு நோயாளிகளுக்கு பாத பாதிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது தெரியவந்தது.எனவே, நீரிழிவு நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை துவக்க நிலையிலேயே கண்டறிந்து, கால் இழப்புகளை தடுப்பதற்கு, ஒருங்கிணைந்த பாதம் பாதுகாப்போம் திட்டம், 26.62 கோடி ரூபாய் மதிப்பில் மாநிலம் முழுதும் செயல்படுத்தப்படும்.இதற்காக, 8,000 டாக்டர்கள், 19,175 மருத்துவ பணியாளர்கள் உட்பட, 28,000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்று, 150 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆப்பரேஷன் சேவை

மேலும், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 100 அரசு மருத்துவமனைகள், 21 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் பாத பாதுகாப்புக்கான பிரத்யேக கிளினிக் துவக்கப்படும். மேலும், 15 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், பாத அறுவை சிகிச்சை சேவை வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajamani Karunanithi
ஜூலை 16, 2024 08:24

தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் - டிசபெடோலஜி தேபர்த்மேன்ட் ? திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ் ?? கிண்டி சூப்பர் ஸ்பேசியலிட்டி ஹாஸ்பிடல் ??? ஓமந்தூரார் சுபெர்ஸ்பிசியலிட்டி ஹோச்பிடல்ஸ் ????


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி