உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கந்துவட்டி வசூலித்தவர் மீது வழக்குப்பதிய தாமதம்; ராமேஸ்வரத்தில் ரோடு மறியல்

கந்துவட்டி வசூலித்தவர் மீது வழக்குப்பதிய தாமதம்; ராமேஸ்வரத்தில் ரோடு மறியல்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் கந்து வட்டிகாரர் மீது போலீசார் வழக்கு பதியாமல் தாமதம் செய்து அலட்சியமாக இருந்ததைக் கண்டித்து பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.ராமேஸ்வரம் தெற்கு கரையூர் பரமேஸ்வரன் மனைவி முனீஸ்பிரியா 28. இவர் அதே பகுதியை சேர்ந்த நம்புசரவணனிடம் ரூ.2.20 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இக்கடனுக்கு அதிகமாக வட்டி செலுத்திய நிலையில் சமீபத்தில் ரூ.2.20 லட்சத்தை திருப்பிக் கொடுத்தார்.அதில் ரூ.40 ஆயிரம் வட்டி பாக்கி இருந்ததாகவும், இதனை நம்புசரவணன் 45, மனைவி நம்பு சுகன்யா 38, தாய் சொர்ணம் 60, உறவினர்கள் ராணி 55, நம்புசெல்வி 52, ஆகியோர் முனீஸ்பிரியாவிடம் கேட்டு தகராறு செய்து தரக்குறைவாக பேசினர்.இதில் வேதனையடைந்த முனீஸ்பிரியா வீட்டில் இருந்த காய்ச்சல், சுகர் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதையடுத்து நம்புசரவணன், குடும்பத்தினர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்ய முனீஸ்பிரியா உறவினர்கள் ராமேஸ்வரம் துறைமுக போலீசாரிடம் முறையிட்டனர்.வழக்குப் பதிய தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்தவர்கள் நேற்று தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.பின் போலீசார் சமரசம் செய்ததும் மறியலை வாபஸ் பெற்றனர். இதன் பின் நம்புசரவணன் உள்ளிட்ட 5 பேர் மீதும் கந்து வட்டி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ