உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள்; நிதி ஒதுக்காததால் செயல்பாட்டில் தாமதம்

வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள்; நிதி ஒதுக்காததால் செயல்பாட்டில் தாமதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. நடப்பாண்டு அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கு இன்னும் நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படவில்லை.குறிப்பாக, 14,000 ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகள் அமைக்கும் திட்டத்திற்கு, 42 கோடி ரூபாய்; சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் பயிரிடுவதற்கு விதைகள் வழங்கும் திட்டத்திற்கு, 36 கோடி ரூபாய்; முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்திற்கு, 206 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்க வேண்டும்.பருப்பு வகைகள் உற்பத்தி திட்டத்திற்கு, 40 கோடி ரூபாய்; உணவு எண்ணெய் உற்பத்தி திட்டத்திற்கு, 45 கோடி ரூபாய்; எண்ணெய் வித்துகள் சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டத்திற்கு, 108 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கவேண்டும்.மா உற்பத்தி சிறப்பு திட்டத்திற்கு, 27.4 கோடி ரூபாய்; வாழை பரப்பு விரிவாக்க சிறப்பு திட்டத்திற்கு, 12.7 கோடி ரூபாய;, பலா சாகுபடி சிறப்பு திட்டத்திற்கு, 1.14 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கவேண்டும். இதுமட்டுமின்றி பல சிறிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை. ஜூன் மாதம் முதல், இந்த திட்டங்களை செயல்படுத்தினால், உரிய பலன் கிடைக்கும்.ஆனால், லோக்சபா தேர்தல் காரணமாக, பிப்., மாதம் முதல் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. வேளாண்துறை நிதி கேட்டு அனுப்பிய பல கோப்புகள், நிதி துறையில் தேங்கி நிற்கின்றன. இதனால், திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால், வேளாண்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sridhar
ஜூலை 21, 2024 12:44

சொரணையற்ற இந்த மக்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது, தெரிந்தாலும் உதறி தள்ளிவிட்டு திருட்டு கும்பலுக்கே ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் வோட்டு போடுவார்கள். ஆனாலும் ஏன் திருட்டு கும்பல் இந்த நிதிகளை ஒதுக்கீடு செய்யவில்லை? ஐநூறு கோடி யில 40 சதவிகிதம் 200 கோடி... கொஞ்சம் சின்ன அமௌன்ட் தான், இருந்தாலும் வார்டு கௌன்சிலர்களுக்கு யூஸ் ஆகுமில்ல??


SAKTHIVEL S
ஜூலை 21, 2024 12:08

கட்டுபடியான விலையை அரசு அறிவிக்க முன் வரவேண்டும். பருத்திக்கு விலை 250 அறிவிக்கவேண்டும் தேனி மாவட்டம் பருத்தி உற்பத்தியில் இன்று காட்சி பொருளாக மாறிவிட்டது அரசின் மெத்தனப்போக்கே காரணம்


Svs Yaadum oore
ஜூலை 21, 2024 09:41

உணவு பொருள் உற்பத்தியில் வட மாநிலங்கள் முன்னிலை .. அவர்களிடம் குறைந்த விலையில் அரிசி கோதுமை கொள்முதல் செய்து அதை தமிழ் நாட்டுக்கு அனுப்புவது மத்திய அரசு. உணவு பொருளுக்கு GST வரி விலக்கு. இதனால் வட மாநிலங்கள் வரி வருவாய் அதிகம் கிடையாது. அவர்கள் சோற்றை வாங்கி தின்று பிறகு மத சார்பின்மையாக அவர்களையே வடக்கன் படிக்காதவன் என்று கேவலமாக பேசுவது இங்குள்ள சமூக நீதி விடியல்.. தமிழ் நாட்டுக்கு தாய்லாந்து அரிசி இறக்குமதி செய்தால் விடியல் ஒரே நாளில் விடிந்து விடும்..


ஆரூர் ரங்
ஜூலை 21, 2024 09:37

அடுத்து டெல்டாவில் கோதுமை, பார்லி, ஓட்ஸ் பயிரிட பத்தாயிரம் கோடி பேக்கேஜ் அறிவிப்பார்கள். அதையும் நம்பி ஓட்டுப் போடுவர். இந்த டுமீல்ஸ் உருப்பட வாய்ப்பு குறைவு.


அப்பாவி
ஜூலை 21, 2024 09:00

அவிங்களுக்கு ஒதுக்கிக் கொள்வதற்கே நிதி பத்தலை. போங்க.. போங்க.


Svs Yaadum oore
ஜூலை 21, 2024 08:09

சட்டிஸ்கர் மாநிலம் அரிசி உற்பத்தி 60 லட்சம் டன் மக்கள் தொகை 2.5 கோடி. தமிழ் நாடு மாநிலம் அரிசி உற்பத்தி 80 லட்சம் டன் மக்கள் தொகை 8 கோடி. தமிழ் நாடு மிக முன்னேறிய ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டிய மாநிலம் ....


Svs Yaadum oore
ஜூலை 21, 2024 08:01

முன்னேறிய மாநிலமான தமிழ் நாடு அரிசி உற்பத்தியில் இரண்டாம் இடத்திலிருந்து பின்தங்கி ஐந்தாம் இடம் செல்ல காரணம் என்ன ?? விடியல் திராவிடங்களிடம் இதற்கு பதில் உண்டா? ஊரெங்கும் ஆற்று மணல் கொள்ளை. மலையை பெயர்த்து கேரளாவுக்கு ஏற்றுமதி. நிலத்தடி நீர் இங்கு பாதாளம் சென்று விட்டது. இந்த விடியலுக்கு வோட்டு போடும் விவசாயிகள் ....


Kasimani Baskaran
ஜூலை 21, 2024 07:48

கூட்டணி தர்மத்துக்காக மாநிலத்தின் உரிமைகளை தியாகம் செய்து விட்டு மத்திய அரசுதான் எல்லா வித வேலைகளையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் ஸ்டிக்கர் புகழ் திராவிட மாடல். காவிரி நீர் பிரச்சினையாகட்டும், விவாசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய மானியமாகட்டும் இதே கேவல அணுகுமுறைதான்.


Svs Yaadum oore
ஜூலை 21, 2024 07:30

உத்தர பிரதேசத்தில் 1971-இல் அரிசி உற்பத்தி 37 லட்சம் டன்... 2023-இல் அது 125 லட்சம் டன்னாக அதிகரித்தது. தமிழகம் 1971-இல் 50.07 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்த நிலையில், தமிழக அரிசி உற்பத்தி 2023-இல் 80 லட்சம் டன்னாக அதிகரித்தது. அரிசி உற்பத்தியில் உத்தர பிரதேசம் முன் சென்று விட்டது. இதற்கும் மேல் உத்தரபிரதேசத்தில் அரிசி பிரதான உணவு கிடையாது. இந்த லட்சணத்தில் விடியல் திராவிடனுங்களுக்கு உத்தர பிரதேசம் படிக்காத பின்தங்கிய மாநிலமாம். இங்கு சோற்றுக்கு வழியில்லை . அடுத்த மாநிலத்திடம் தண்ணீருக்கும் சோற்றுக்கும் பிச்சையெடுக்கும் நிலைமை ....இந்த நிலைமையில் தமிழ் நாட்டை ஐரோப்பா நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டுமாம் ...


Svs Yaadum oore
ஜூலை 21, 2024 07:21

1971-இல் அரிசி உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாமிடம் வகித்த தமிழ்நாடு இன்று 5-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சுமாா் 60 சதவீதம் மட்டுமே வளா்ச்சி. ஆனால் மக்கள்தொகை 100 சதவீதம் உயா்ந்துள்ளது. 1970-இல் தமிழ்நாடு மக்கள்தொகை 4.12 கோடி. 2023-இல் 8.39 கோடி. 1971இல் சிறிது உபரி இருந்தது. பின் படிப்படியாக பற்றாக்குறை மாநிலமாக மாறிவிட்டது. ..இங்கு ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களிலிருந்து வெளிச்சந்தை வழியே அரிசி வருகிறது. பருப்பு தானியங்கள் வட மாநிலங்களிருந்து வர வேண்டும். சோற்றுக்கு பிச்சை எடுக்கும் மாநிலமாக உள்ளது. திராவிட விடியல் ....தமிழ் நாட்டை ஐரோப்பா போன்ற முன்னேறிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டுமாம் ....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை