உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மண்டகப்படி உரிமை மறுப்பு சட்டத்திற்கு எதிரானது: உயர்நீதிமன்றம் உத்தரவு

மண்டகப்படி உரிமை மறுப்பு சட்டத்திற்கு எதிரானது: உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் மேலமங்கலம் வடக்கு கிராம கோயில் திருவிழாவில் ஒரு சமூகத்தினருக்கு மண்டகப்படி உரிமை வழங்காதது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மேலமங்கலம் வடக்கில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஜூலை 21 ல் திருவிழா துவங்குகிறது. தங்கள் சமூகத்தினருக்கு மண்டகப்படி நடத்த அனுமதிக்க அறந்தாங்கி ஆர்.டி.ஓ.,விற்கு உத்தரவிட வேண்டும் என மெய்யப்பன் என்பவர் மனு செய்தார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: ஐந்து சமூகங்களில் முதல் நான்கு சமூகங்கள் மண்டகப்படி உரிமையை அனுபவித்து வருகின்றன. ஏதாவது ஒரு நாளில் நடைபெறும் மண்டகப்படியில் மற்றொரு சமூகம் பங்கேற்கலாமா என விழா பொறுப்பாளர்களிடம் வினவினேன். சாதகமான பதில் இல்லை. இது வேண்டுமென்றே சமூக விலக்கல் என்ற முடிவுக்கு வர வேண்டும். இதை ஏற்க முடியாது.இது பொதுக்கோயில். அனைத்து சமூகத்தினராலும் வழிபடப்படுகிறது. நான்கு சமூகங்கள் மண்டகப்படி உரிமையை அனுபவிக்கும் போது, மற்றொரு சமூகமும் அதே உரிமையைப் பெற உரிமையுண்டு.அரசியலமைப்பு சமத்துவத்தை வலியுறுத்துகிறது. ஜாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது. மதத்தை பின்பற்ற, பிரசாரம் செய்ய உரிமை உண்டு. மேலமங்கலம் வடக்கு கிராம கோயில் 10 நாட்கள் திருவிழாவில் ஒரு சமூகத்தினருக்கு மண்டகப்படி உரிமை வழங்காதது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.திருவிழாவிற்கு தடை விதிப்பது பக்தர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும். ஒரு சமூக பிரச்னையை உணர்வுப்பூர்வமாக கையாள வேண்டும். இதை மதத் தலைவர்களும், சமூக சேவகர்களும் முன்னின்று நடத்த வேண்டும் என விரும்புகிறேன். உள்ளூர் தலைவர்களை சந்தித்து சமாதானப்படுத்த வேண்டும். சமூக அமைப்புகளுக்கும் சம பங்கு உண்டு. ராமகிருஷ்ண தபோவனத்தின் சுவாமி நியமானானந்தா, கோவிலுார் மடத்தின் நாராயண ஞான தேசிகர், வி.எச்.பி.,யின் சேதுராமன் மற்றும் ராமநாதபுரம் குப்புராமு ஆகியோரை மனதில் வைத்திருக்கிறேன். இதயம், மனசாட்சியை கவர்வதன் மூலம் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால் அது நிலைத்ததாக, நீடித்ததாக இருக்கும். எதேச்சையான அணுகுமுறை அதை அடையாது. இவ்விவகாரம் ஹிந்து கோயிலைச் சுற்றி வருவதால், ஹிந்து ஒற்றுமைக்காக பாடுபடும் அமைப்புகளால் மட்டுமே ஒற்றுமையை கொண்டுவர முடியும். அவர்கள் மட்டுமே நேர்மறையான செயலை கொண்டுள்ளனர். மற்றவர்கள் கலங்கிய நீரில் மீன்பிடிப்பார்கள்.சம்பந்தப்பட்ட தாசில்தார் சமாதான கூட்டம் நடத்த வேண்டும். பிரச்னையை கையாள அவர் மத, சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்தலாம். இதன் மூலம் எந்த வகையான சூத்திரத்தையும் உருவாக்க முடியும். திருவிழாவில் ஏதேனும் ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை மண்டகப்படி நடத்த அனுமதிப்பது முடிவாக இருக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

s chandrasekar
ஜூலை 06, 2024 13:05

ஐயா கோயில் திருவிழாவில் அணைத்து ஜாதி மக்களுக்கும் சம உரிமை உண்டு என்பது நல்லது . வேலைவாய்ப்பில் ஏன் அனைவரும் சமம் என்று கருதாமல் முற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஜாதி அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது . முற்படுத்தப்பட்ட மக்குளும் இந்தியக்குடி மக்கள் தானே .


தமிழ்வேள்
ஜூலை 06, 2024 09:33

மண்டகப்படி உரிமை முதலில் கோயில் தொடர்புடைய பாரம்பரிய சமூகங்களுக்கும் பிறகு வழிபாட்டு விருப்பம் உடைய பிற ஹிந்து சமூகங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.. திராவிட நாஸ்திக கும்பல் மற்றும் நாஸ்திக அலுவலர்களுக்கு எந்த வழிபாடு சார்ந்த உரிமைகள் வழங்க தேவையில்லை


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி