உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடை விடுமுறையையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

கோடை விடுமுறையையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம்: கோடை விடுமுறையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா, ஆன்மிக தலங்களுக்கு மக்கள் குவிகின்றனர். நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருகை தந்தனர்.பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி, கோயில் மேலவாசல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து ஆபத்தை உணராமல் கடலில் உற்சாகமாக குளித்து விளையாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி