மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரம் செய்யப் பட்டது.இரவு 10:45 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, அம்மன் தாலாட்டு பாடல்கள் பாடப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.பக்தி பரவசத்தில் நுாற்றுக்கணக்கில் பக்தர்கள் சாமி வந்து ஆடினர். தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். இரவு 12:00 மணிக்கு மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.நேற்று முன்தினம் மாலை 5:00 மணியில் இருந்து, மேல்மலையனுாரிலும் லேசான மழை பெய்தது. இருந்தும், அதனை பொருட்படுத்தாமல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
2 hour(s) ago