உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கு மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படை தயார்

நான்கு மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படை தயார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை தொடர்வதால், நான்கு மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில், மே 22ம் தேதி வரை கனமழை தொடரும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி, கலெக்டர்களுக்கு ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு, மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு தலா மூன்று குழுவினரும், கோவைக்கு ஒரு குழுவினரும் அனுப்பப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும், 30 வீரர்கள் உள்ளனர். இவர்கள் தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயாராக உள்ளனர்.அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து மாவட்ட நிர்வாகங்களும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

முத்துபாண்டி
மே 18, 2024 17:54

இவிங்களை விட்டு நீர்த்தடங்களை தூர்வாரச் சொல்லலாமே. வெள்ளம் வந்தால்தான் செயல்படுவார்களா?


ஜஜ
மே 18, 2024 06:56

அப்போ மழை இன்றுடன் நிறைவு


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை