உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.எல்.ஏ., மனைவி காரில் கரை வேஷ்டி டீ சர்ட்கள் பறிமுதல்

தி.மு.க., எம்.எல்.ஏ., மனைவி காரில் கரை வேஷ்டி டீ சர்ட்கள் பறிமுதல்

தென்காசி, :தென்காசி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் தி.மு.க., எம்.எல்.ஏ.,ராஜாவின் மனைவி சென்ற காரில் பறக்கும் படையினர் தி.மு.க., கரை வேஷ்டிகள், டீ சர்ட்களை பறிமுதல் செய்தனர்.தென்காசி ஆயக்குடி ரோட்டில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில் தி.மு.க., கரை வேஷ்டிகள், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி படம் பொறிக்கப்பட்ட டீ சர்ட்கள் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் அந்த கார் சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ., மனைவி அனுசியாவுடையது என தெரிய வந்தது. இருநாட்களுக்கு முன் ராஜா எம்.எல்.ஏ., காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்யாமல் இருந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பி ஓய்வதற்குள் அவரது மனைவியின் காரில் தி.மு.க., கரை வேஷ்டிகள் பிடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி மீறி வேஷ்டி, டீசர்ட்கள் கொண்டுசெல்லப்பட்டதால் தென்காசி தொகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்