உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் நேரத்தில் ரூ.1000 வாங்கி ஏமாற வேண்டாம்

தேர்தல் நேரத்தில் ரூ.1000 வாங்கி ஏமாற வேண்டாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆத்துார்:கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் தேவதா ைஸ ஆதரித்து, சேலம் மாவட்டம் ஆத்துார், ராணிப்பேட்டையில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் அக்கட்சி தலைவர் அன்புமணி பேசியதாவது:வரும், 2026ல், தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைப்போம். திராவிட கட்சிகளுக்கு, 57 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தது போதும். பா.ம.க., வெற்றி பெற்றதும், ஆத்துார் மாவட்டம் உருவாக்கப்படும். ஆத்துாரில், 1,200 அடிக்கு கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டது.அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு தொலைநோக்கு பார்வை, திட்டம் எதுவும் இல்லை. ஆத்துாரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க.,வினர் ஓட்டுகளை வீணாக்க வேண்டாம். இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., கூட்டணியில், தேசிய கட்சிகள் இல்லை. பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதாக கூறிய தி.மு.க., 3 ஆண்டுகளாகியும் கொண்டு வரவில்லை. காவிரி உபரிநீர், வசிஷ்ட நதியில் கொண்டுவரப்படும். தேர்தல் நேரத்தில், 500, 1,000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஏப் 13, 2024 15:18

ஈரோடு கிழக்கில் தேர்தல் பிரசாரம் துவங்கிய நாளிலிருந்து வாக்குப்பதிவு நாள் வரை தினமும் பிரியாணியும் ஐநூறும் கொடுத்த கட்சி வெறும் ஆயிரமா கொடுக்கும்?


Indian
ஏப் 13, 2024 12:45

ஏமாறுபவர்களை ஏமாற்றுவதுதான் அரசியல்வாதிகளின் வேலை, அவர்கள் வழியில் சென்று அவர்களுக்கு புரியவைத்தால் என்ன?


பேசும் தமிழன்
ஏப் 13, 2024 10:05

அரசு போண்டியாகி....அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட வேண்டும் ....அப்போது தான் இலவசங்கள் இல்லாமல் போகும் .....சொல்லமுடியாது கடன் மேல் கடன் வாங்கி... மக்களை கடனாளி ஆக்கி விட்டு போய் விடுவார்கள்......அவர்களுக்கு ஓட்டு முக்கியம் !!!!


பேசும் தமிழன்
ஏப் 13, 2024 10:01

அவர்கள்... 1000 ரூபாய் கொடுத்து விட்டு.... 1000 கோடி ரூபாய் ஆட்டையை போட்டு விடுவார்கள்...... அதனால் மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்.


Palani Ramachandran
ஏப் 13, 2024 08:42

திரு . டாக்டர் அன்புமணி ராமதாஸ் பெயரில் ஒன்றும் குறைவில்லை.ஒவ்வொரு முறையும் எந்த கட்சிகள் பணம் கொடுக்கிறார்களோ அந்தந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது உங்களுக்கும் உங்கள் அப்பாவிற்கும் கைவந்த கலை.கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது. நீங்கள் பெட்டிகளை வாங்கிக் கொள்ளலாம் மற்றவர்கள் வாங்கிக் கொள்ள கூடாது.


Ramesh Sargam
ஏப் 13, 2024 08:27

கொடிய விஷமுள்ள பாம்புக்குக்கூட பால் வார்த்து வீட்டில் வளர்க்கலாம் ஆனால் அதைவிட கொடிய திமுகவுக்கு வோட்டு போட்டு உங்கள் வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளாதீர்கள்


R Elayaperumal
ஏப் 13, 2024 08:03

மக்கள் வாங்க வேண்டாம் நாங்க மொத்தமாக ஐநூறு கோடி வாங்கிட்டோம்


thangavel
ஏப் 13, 2024 07:32

NEENGA MATTUM 1000 KODI VANGITTU


ராமகிருஷ்ணன்
ஏப் 13, 2024 07:20

திமுகவினர் வாக்கு வங்கி உருவாக்க 1000 ரூபாய் மகளீர் உதவி தொகை தொடங்க பட்டது. அதுவும் தனது கட்சி குடும்பத்தினருக்கு பார்த்து கொடுத்து விட்டது. அதற்காக குடும்பத்துக்கு 5000 ரூபாய் விலை வாசியை உயர்த்தி விட்டது. சுருட்டுவதற்கு 4000,மகளீர் க்கு 1000,ரூபாய். சூப்பர் திட்டம்.


Kasimani Baskaran
ஏப் 13, 2024 05:59

திராவிடர்கள்தான் காசுக்கு ஓட்டு என்ற திருமங்கலம் பார்முலாவை கண்டு பிடித்தார்கள் ஆளுக்கு ஆயிரம் கொடுத்து விட்டு வருடத்துக்கு கோடி லவட்டியிருக்கிறார்கள் என்று டக்ளசே சொல்லியிருக்கிறார் ஏற்கனவே கடனிலிருக்கும் மாநிலத்தை ஓவராக சுரண்டினால் கேரளா அளவுக்கு ஆகிவிடும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை