உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது' என சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஆக.,20) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற நேரங்களில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை' என தீட்சிதர்கள் தரப்பு தெரிவித்தது.இதனையடுத்து, 'ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்க கூடாது' என சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Swamimalai Siva
ஆக 20, 2024 21:44

நான் 8 வருடங்கள் சிதம்பரத்தில் வசித்தேன். பெரும்பாலும் தினசரி கோவிலுக்கு செல்வேன். கனகசபையில் ஏறி நின்று அம்பலவாணனை தரிசித்திருக்கின்றேன். அப்போதெல்லாம் கோவிலுக்கு வருபவர்கள் சுவாமி தரிசனத்திற்கு மட்டுமே வருவார்கள். இப்போது நடப்பது ஒரு திட்டம் போட்ட ஒரு செயலாக தெரிகிறது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 20, 2024 21:39

அக்கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது .... சுவாமி தரிசனத்துக்கு என்று விதிகள் இருக்கும்போது, அக்கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் அதில் நீதிமன்றங்கள் எப்படித் தலையிடலாம் ????


vbs manian
ஆக 20, 2024 17:32

மட்டமான அபவாதம். பள்ளி மாணவனாக இருந்த பொது பலதடவை கனக சபை ஏறி நின்று நடராஜரை தரிசித்திரிக்கிறேன். கங்கணம் கட்டிக்கொண்டு தீக்ஷிதர் மேல் வன்மம். உள்ளூர் நாத்திக அரசியல் வாதி செய்யும் அநாகரிகம். கோர்ட் மசூதி சர்ச் பக்கம் பார்க்குமா.


SUBBU,MADURAI
ஆக 20, 2024 18:34

சிதம்பரம் நடராஜர் கோவிலில் காலங்காலமாக இருந்து வரும் வழிபாட்டு நடைமுறையை மாற்றி தீர்ப்பு சொல்ல நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை இதே மற்றவர்களின் வழிபாட்டு முறையை மாற்ற நீதிமன்றம் உத்தரவிடுமா?


Nagarajan D
ஆக 20, 2024 17:07

பல வருடமாக இழுத்து கொண்டிருக்கும் ஊழல் வழக்குகளில் இதை போன்ற தீர்க்கமான தீர்ப்புகள் தரலாமே நீதிபதிகளே... மத விஷயங்களில் நீதிமன்றங்களுக்கு என்ன வேலை? இதை போல மசூதிகளில் பெண்களுக்கு உரிமை என்று தீர்ப்பு தருமா இந்த நீதிமன்றங்கள்? அல்லது கிறிஸ்துவ திருச்சபைகளில் பெண்கள் உரிமைபற்றி ஏதாவது உத்தரவு தருமா நீதிமன்றங்கள்?


.
ஆக 20, 2024 16:27

தீட்சிதர்கள் கூறியதையே செய்யுமாறு தீட்சிதர்களுக்கு கோர்ட் தீர்ப்பு?. மத நடவடிக்கைகளில் அரசும் கோர்ட் டும் தலையிடாமலிருத்தல்தான் மதசார்பின்மை. இங்கு நடப்பது வேறு


கோபாலகிருஷ்ணன்
ஆக 20, 2024 16:25

பெண்கள் மசூதிக்குள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமா....???


RG GHM
ஆக 20, 2024 17:01

யாரும் கேட்பது இல்லை


rsudarsan lic
ஆக 20, 2024 16:23

கருப்பு சட்டையில் வர அனுமதி கைலி அரை டிராயர் அனுமதி இப்படி நிறைய இருக்கிறது


மேலும் செய்திகள்











புதிய வீடியோ