உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டை பிளவுபடுத்த ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டதே திராவிட கோட்பாடு: கவர்னர் ரவி

நாட்டை பிளவுபடுத்த ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டதே திராவிட கோட்பாடு: கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''நாட்டை பிளவுபடுத்த உருவாக்கப்பட்டதே திராவிட கோட்பாடு,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.தென்மாநில கல்வி மையம் சார்பில், வழக்கறிஞர் ஜெகந்நாத் எழுதிய 'சென்னை மாகாணத்திற்கான முதல் உரிமைக்குரல் எழுப்பிய கஜுலு லட்சுமிநரசு செட்டி' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில், தமிழக கவர்னர் ரவி நுாலை வெளியிட, மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வைத்தியநாதன் பெற்றுக் கொண்டார்.

விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:

பிரிட்டிஷ் கவர்னர் ஆஷ்சின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், தமிழக வீரர் வாஞ்சிநாதன், அவரை தன் 25வது வயதில் சுட்டுக் கொன்றார். அவரின் நினைவு தினத்தில், தமிழக சகோதர - சகோதரிகளுக்கு என் வணக்கத்தை தெரிவிக்கிறேன்.பிரிட்டிஷார் நம் நாட்டிற்கு வியாபாரம் செய்ய வந்தபோது, நாம் பல சமஸ்தானங்களாகவும், பல மொழி பேசுவோராகவும் பிரிந்திருந்தோம். ஆனால், அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் இருந்தோம். அவர்கள், வியாபாரத்தை பெருக்க, வட மாநிலங்களில் ஹிந்து - முஸ்லிம் எனவும், தென் மாநிலங்களில் திராவிடர், திராவிட மொழி என்ற புதிய கோட்பாட்டையும் உருவாக்கி நாட்டை பிளவுபடுத்தினர்.அவர்கள் வந்தபோது, நாட்டில் அனைவரும் பாகுபாடு இல்லாமல், அவரவர் கிராமத்தில் அவரவர் மொழியில் படித்தனர். உயர் கல்வியில் தாய்மொழியும், சமஸ்கிருதமும் இருந்தன. பள்ளிகளுக்கான நிலங்களை சமூகத்தினரே அளித்தனர். ஆசிரியர்களாக இருந்த பிராமணர்கள், கல்விக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. அவர்களுக்கு தேவையானதை சமூகத்தினர் செய்தனர்.கல்வி தானம் அளித்த பிராமணர்களை ஒழித்து, மூட நம்பிக்கையை வளர்த்து, கல்வியை வியாபாரமாக்க திட்டமிட்ட அவர்கள், பிராமண துவேஷம், சமஸ்கிருத துவேஷம் செய்தனர். இதை இங்கிருந்தோர் நம்பினர்.இந்தியர்களை, 18ம் நுாற்றாண்டில், மற்ற நாடுகளில் அடிமைகளாக விற்கும் பழக்கம் இருந்ததை எதிர்த்து, நாடு முழுதும் கிளர்ச்சி நடந்தது. வங்காளம் பிரிக்கப்பட்ட போது, இங்கு புரட்சி வெடித்தது. இப்படி, நம் நாட்டையும், பாரம்பரியத்தையும் காப்பதற்கான போராட்டம் தொடர்ந்து நடந்தது.ஆனால், இந்த போராட்டங்களை இருட்டடிப்பு செய்துவிட்டு, பிராமணரல்லாதோர் இயக்கம், திராவிட இயக்கத்தால், மாநிலம் வளர்ந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆவண காப்பகங்களில் உள்ள சான்றுகள் வேறு மாதிரியாக உள்ளன. இப்படி மறைக்கப்பட்ட வரலாற்றில் ஒன்று தான், சென்னை மாகாணத்துக்கான மாநில மொழி கல்வி உள்ளிட்ட உரிமைகளுக்காக போராடிய கஜுலு லட்சுமிநரசு செட்டியின் வரலாறு. இந்த நுால் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. இது போன்ற உண்மைகளை எழுத ஆய்வாளர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

K.n. Dhasarathan
ஜூன் 20, 2024 17:05

ஆராய்ச்சி செய்து தேர்ந்தவர் போல காட்டிக்கொள்வதில் பொய் ஜே பி யினர் என்றுமே வழக்கம், பாவம், இவர் ஓய்வு எடுக்கும் வயதில், இவரது அமைப்பினர் இவரை துரத்திக்கொண்டு இருக்க இவரும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டுதான் உள்ளார்.


kannan
ஜூன் 20, 2024 07:44

பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா திராவிட உத்கல பங்கா ~ தேசிய கீதத்தை அவமதிக்கிறார்.


K.Muthuraj
ஜூன் 19, 2024 17:55

மொழியினை மையமாகக்கொண்டு இனம் என்ற வார்த்தை தமிழக பிரிவினை கட்சிகளால் பத்தொன்பதாம் நூற்றாண்டு முற்பகுதியில் ஏற்பட்டது. பல்வேறு மொழிகள் இருந்தாலும் மொழியினால் பெரிய கலவரங்கள் இந்தியாவில் என்றும் ஏற்பட்டது இல்லை. ஆங்கிலேயர்களுக்குப்பின்தான் இங்ஙனம் சண்டை உண்டாக்கப்பட்டது.


R. John
ஜூன் 19, 2024 12:56

ஆரியம் என்கிறீர்கள், வட இந்தியாவில். சரித்திர நூல்கள் ஆரியம் என்று பறை சாற்றுகிறது. ஆர்ய நம்பிக்கைகள், கோட்பாடு இருக்கும்போது திராவிடம் மட்டும் உருவாக்கப்பட்டதா? வெளிப்படுத்தும் கருத்துக்களில் ஒருசார்பு நிலை வேண்டாம், கவர்னர் அவர்களே


anna durai
ஜூன் 19, 2024 09:15

இந்த மாதிரி உளறல்கள் தமிழ்நாட்டில் ஈடுபடாது


ThamizhMagan
ஜூன் 19, 2024 17:26

... எடுபடாது.


Ganesun Iyer
ஜூன் 19, 2024 06:49

திராவிடம்=> ஒரு திரவம் மேட்டிலிருந்து பள்ளத்திற்கு ஓடுவதற்கு தோதுவாக அமைந்த இடம் => திராவிடம். தமிழ் /தெலுகு/ கன்னட /மலையாளம் இவைகள் மொழிகள் // த்ராவிட மொழி இல்லை தமிழ் ஒரு கலாச்சாரம் /ஒரு பண்பாடு /ஒரு நாகரீகம் த்ராவிடம் ஒரே கலாச்சாரம் இல்லை /ஒரே பண்பாடு இல்லை /ஒரே நாகரீகம் இல்லை. தெலுங்கர்கள் தமிழர்களை அடிமை படுத்த பயன்பட்டது இந்த திராவிட மாயை.


rengaraju seenivasan
ஜூன் 18, 2024 20:26

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட "இந்தியா" மட்டும் உண்மையாய் இருக்கும் போது "திராவிடம்" மட்டும் ஏன் பொய்யாய்த் தெரிகிறது மாண்புமிகு ரவி அவர்களுக்கு?


venugopal s
ஜூன் 18, 2024 17:12

பாவம் இவரும் வந்ததில் இருந்து ஏதோ ஒன்றினைப் போல கத்திக் கொண்டே தான் இருக்கிறார், ஆனால் தமிழக மக்கள் ஒருத்தர் கூட இவர் பேச்சை கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்களே!


Rpalnivelu
ஜூன் 19, 2024 06:26

இருநூறு ரூவாவுக்காக நீங்க கூவுவது மிக அதிகம். ஷேம் ஷேம்


MADHAVAN
ஜூன் 18, 2024 17:09

ரவி சொல்லுவது முற்றிலும் தவறு, இரண்டு மூன்று தலைமுறைக்குமுன் கல்விக்கு ஏங்கியது உண்மை


Sivak
ஜூன் 21, 2024 17:05

அதை நீ பார்த்தே ?


Ms Mahadevan Mahadevan
ஜூன் 18, 2024 15:21

இவர் பாதி உண்மைதான் சொள்ளுகிரார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை