உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாட்டிலால் குத்தி டிரைவர் கொலை

பாட்டிலால் குத்தி டிரைவர் கொலை

சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் சுரேஷ் 36, மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். சிவகாசி சாத்துார் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத கட்டடத்தின் அருகே சுரேஷின் பிணம் கிடந்தது. தகவலறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். போலீசார் கூறியதாவது: சுரேஷ் மற்றும் 56 வீட்டு காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் 28, சுப்ரமணியபுரம் காலனி நந்தகுமார் 26, நாரணாபுரம் முனீஸ்வரன் காலனி கார்த்தீஸ்வரன் 21, பழனி 28, ஒன்றாக மது அருந்தி உள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேரும் சுரேஷை பாட்டிலால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
மே 06, 2024 09:52

டெட்ரா பேக் இந்தமாதிரி இடங்களுக்கு தான் மிகவும் தேவை ஆயுதமாக எதையும் தேட த் தேவையில்லாமல் பாட்டில்கள் கிடைத்து குடித்த சண்டை, கொலைக்கெல்லாம் எவ்வளவு உதவியாக இருக்கிறது


Mani . V
மே 06, 2024 04:18

இப்ப புரியுதா எதுக்கு எங்களின் மொத்துசாமி ஸாரி முத்துசாமி டெட்ரா பாக்கெட்டில் சோமபானத்தை விற்க வேண்டும் என்று உளறுகிறார் ஸாரி சொல்கிறார் என்று?


மேலும் செய்திகள்













புதிய வீடியோ