உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்வு அட்டவணை மாற்றம்; தள்ளி போகிறது விடுமுறை

தேர்வு அட்டவணை மாற்றம்; தள்ளி போகிறது விடுமுறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 11 நாட்கள் தள்ளிப்போகிறது.தமிழக அரசு பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள், வரும், 2ம் தேதி துவங்கி, 12ம் தேதி முடியும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ரம்ஜான் பண்டிகை, 10ம் வகுப்பு தேர்வு, தெலுங்கு, தமிழ் புத்தாண்டு விடுமுறை, தேர்தல் என, பல்வேறு காரணங்களால், இரு தேர்வுகள் மாற்றப்பட்டு உள்ளன.பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்.,10ல் நடத்துவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் பாடத்தேர்வு, ஏப்., 22ல் நடக்கும்ஏப்., 12ல் நடத்துவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு, ஏப்., 23ல் நடத்தப்படும். இதன்படி தேர்வுகளை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பழைய அட்டவணைப்படி, ஏப்., 13 முதல் கோடை விடுமுறை துவங்கும் என்று கூறப்பட்டிருந்தது. தேர்வு அட்டவணை மாற்றத்தால், கோடை விடுமுறை, ஏப்., 13ல் துவங்குவதற்கு பதில், ஏப்., 24ம் தேதியில் துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

bhaskaran
மார் 30, 2024 12:08

நாளுக்கு நாள் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதுகாலம் காலமாக பள்ளிக் குழந்தைகள் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற உண்மையான காரணகளுக்காக மாதங்கள் விடுமுறை என்று இருந்தது


bhaskaran
மார் 30, 2024 12:04

நாளுக்கு நாள் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது


angbu ganesh
மார் 30, 2024 11:23

SANDHARPAVADHINGALUKKU VOTTU PODA KOODHU PLEASE BOICOT DMK


angbu ganesh
மார் 30, 2024 11:22

aen indha scheula podum podhey ivanungalukku theriyadha ramjan april thnunnu ivanunga enna ippadi padippu


அருண் பிரகாஷ் மதுரை
மார் 30, 2024 09:46

காலம் காலமாக பள்ளிக் குழந்தைகள் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற உண்மையான காரணகளுக்காக 2 மாதங்கள் விடுமுறை என்று இருந்தது. பின்னர் அந்த விடுமுறை சில ஆண்டுகளில் குறைக்கப்பட்டு தமிழ் புத்தாண்டு விடுமுறையோடு கோடை விடுமுறை விடப்படும்.ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்படும். எனவே குறைந்தது 55 நாட்கள் விடுமுறை இருக்கும்...ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஏப்ரல் மாதம் முழுவதும் பள்ளியை திறக்கும் பழக்கம் உருவாகி உள்ளது. ஏன் கடந்த 3 ஆண்டுகளாக மட்டும் இந்த மாற்றம் என்பதற்கு இதுவரை பள்ளிக் கல்வித் துறை எந்தவொரு காரணமும் தெரிவிக்கவில்லை. ஆல் பாஸ் போடப்படும் போது எதற்காக இவ்வாறு விடுமுறையை குறைக்க வேண்டும்.தனி ஒருவன் படம் போல வேண்டுமென்றே பல மறைமுக காரணங்களுக்காக இது திட்டமிட்டு செய்யப்படுவது போல உள்ளது.பத்திரிக்கை துறை நண்பர்களும் இந்த மாற்றம் பற்றி 3 ஆண்டுகளாக எந்தவொரு விளக்கமும் கேட்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு தேர்தல் இருப்பது தெரிந்தும் எதற்காக மாற்றம் செய்ய வேண்டும்..ஓரிரு நாட்கள் முன்னரே திட்டமிட்டு முடித்து இருக்கலாம். அப்படி திட்டமிடவில்லை என்றால் இது கல்வித்துறை அதிகாரிகளின் திறமையின்மையைக் காட்டுகிறது. உண்மையில் இது வேறொரு காரணத்துக்காக திட்டமிட்டு தள்ளி வைப்பது போல உள்ளது.


ஆரூர் ரங்
மார் 30, 2024 09:19

முன்பு கணிக்கப்பட்டதைவிட தாமதமாகவே தேர்தல் நடத்தப்படுகிறது. மாநில அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்த பின்னரே தேர்தல் தேதியை அறிவித்தார்கள். முன்யோசனையில்லாத கையாலாகாத மாநில அரசின் செயல்பாடுகளால் அனைவருக்கும் அல்லல்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை