உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

சென்னை : லோக்சபா தேர்தல் காரணமாக தமிழகத்தில், 36 சுங்கச்சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டண உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.நாடு முழுதும், 1.70 லட்சம் கி.மீ.,க்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள், பசுமை வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 855 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில், 6,805 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 63 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடிகளில், ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை, 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகள் உள்பட, நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில், ஏப்ரல், 1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர இருந்தது. லோக்சபா தேர்தல் காரணமாக, அந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி, தமிழகத்தில், 54 சுங்கசாவடிகளில், குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் அதிகபட்சம் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில், பல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதால், வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகள்

வருவாய் எவ்வளவு? நாடு முழுதும் உள்ள, 855 சுங்கச் சாவடிகளின் ஆண்டு வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. மத்திய பா.ஜ., அரசு பொறுப்பேற்றதும், தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் விரைவு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது, கட்டண வசூல் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.ஆண்டு வாரியாக வருவாய்2018-19 25,154 கோடி2019-20 27,637 கோடி2020-21 27,923 கோடி2021-22 33,907 கோடி2022-23 48,022 கோடி2023-24 64,809 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஜூன் 03, 2024 21:07

இப்போதே இப்படி, பாஜக மட்டும் மறுபடியும் வெற்றி பெற்று விட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் எல்லோரும் பிச்சை எடுக்க வேண்டியது தான்!


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 05, 2024 03:17

வேணுகோபால் ஏன் பொய் சொல்கிறாய்


Es
ஜூன் 03, 2024 17:30

FAST TAG is important role to increase the revenue...


GMM
ஜூன் 03, 2024 15:16

சுமார் 2 லட்சம் கி. மீ. சாலை அமைத்து பராமரிப்பு செலவை மேற்கொள்ள சுங்க கட்டணம். முதலீடு செய்பவருக்கு வட்டி கொடுக்க வேண்டும். யாரும் பங்கு முதலீடும் செய்யலாம். பல ஆயிரம் முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க படுகிறது. காங்கிரஸ், திராவிடம் போல் ஒரு குடும்ப சொத்து கிடையாது. தேசிய நெடுஞ்சாலை GDP வளர்ச்சிக்கு உதவுகிறது.


Sree
ஜூன் 03, 2024 12:48

ஒவ்வொரு சுங்க சாவடியில் சாலை செலவு எவ்வளவு கட்டண வருவாய் என்ன என மின்னனு பலகை மூலம் அறிவிக்க வேண்டும் இந்தியாவில் 1 கி மீ சாலைக்கு போடும் செலவு ஒரு மாதத்தில் திரும்ப கிடைத்து விடுகிறது பிறகு எதற்கு தொடர் வசூல் இந்தியாவில் சுங்க கட்டணம் தமிழ் நாட்டில் மட்டுமே அதிகம்


ஆரூர் ரங்
ஜூன் 03, 2024 12:39

பாலு சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்த நேரத்தில் இந்த சாலைப் பராமரிப்பு சுங்க நிறுவனங்களுடன் நீண்டகால வசூல் ஒப்பந்தம் போட்டார். இப்போது மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து ஒப்பந்தங்களை ரத்து செய்ய முயன்றால் பல லட்சம் கோடி இழப்பீடு அளிக்க வேண்டியிருக்கும். தமிழக நெடுஞ்சாலைத்துறை கூட சுங்கச்சாவடி களை நடத்துகின்றனர் என்கிறார்கள். அதை யாரும் குறைகூறவில்லை.)


theruvasagan
ஜூன் 03, 2024 10:42

இது ஒரு பகல் கொள்ளை. செலவழித்ததை விட பல மடங்கு அதுவும் பல வருடங்களாக வசூல் செய்து கொண்டுள்ளார்கள். செலவு எவ்வளவு. வரவு எவ்வளவு என்கிற வெளிப்படைத் தன்மை இல்லை. நியாயமான கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை. ஆண்டுக்கு ஆண்டு ஏற்றிக் கொண்டே போவது அநியாம்.


பாமரன்
ஜூன் 03, 2024 10:35

மத்திய அரசு மக்களிடம் கொள்ளையடித்தால் நாட்டின் வளர்ச்சிக்காக... டைரக்டர் அரசுக்கு எவ்ளோ வருது.. எந்த கார்போரேட்டுக்கு எவ்ளோ போகுதுன்னு கேட்கக்கூடாது... அதே மாநில அரசின் நிறுவனம் மின் கட்டணத்தை ஏத்தினாலோ அல்லது அரசின் வருவாயை முன்னேற்ற சாராயம் மற்றும் சொத்து விற்பனை வரிகளை உயர்த்தினாலோ எதிரி கட்சியின் கொள்ளைன்னு சொல்லணும்...


Kundalakesi
ஜூன் 03, 2024 09:58

கோவை கொச்சி நெடுஞ்சாலை படு மோசம் மற்றும் இரு வழிப்பாதை மட்டுமே. இதில் இந்த விலையேற்றம் அமல்படுதினாலும் தே. நெ செல்லும் வேகத்தில் இதில் செல்ல முடியாது


Karthik
ஜூன் 03, 2024 09:33

நான் ஒரு பிஜேபி அபிமானி... ஆனால் இந்த சுங்க வரியில் மத்திய அரசாங்கம் செய்வது பகல் கொள்ளை ஒரு சுங்க சாவடியில் எவ்வளவு செலவு எவ்வளவு வரவு என்று சொல்வதில்லை எதை எதையோ digitize செய்கிறேன் என்று சொல்லும் மத்திய அரசு இதற்கு ஏன் விவரம் சொல்வது இல்லை? இதையே மக்களுக்கு பிஜேபி மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது


அருணாசலம்
ஜூன் 03, 2024 10:47

மிகவும் சரி. வரவும் செலவும் விவரமாகச் சொன்னால் நல்லது.


Jai
ஜூன் 03, 2024 09:32

இந்த கட்டண உயர்வு NHAIயை சென்றடைகிறதா? அல்லது ரோடு இன்ஃரா கம்பெனிகள் முழுவதுமாக வைத்து கொள்கின்றனவா? விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ