உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயி வெட்டிக்கொலை அண்ணன், தம்பி கைது

விவசாயி வெட்டிக்கொலை அண்ணன், தம்பி கைது

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரத்தில் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே ஊரை சேர்ந்த சகோதரர்கள் நிசாந்த் 26, நித்திஷ் 24, ஆகியோரை ராயப்பன்பட்டி போலீசார் கைது செய்தனர்.உத்தமபாளையம் சின்ன ஓவுலாபுரம் துரைசாமி மகன் சந்திரவேல்முருகன் 46. இவரை சில நாட்களாக காணவில்லை. இதனால் மகன் பிரசாத் 21, ராயப்பன்பட்டி போலீசில் மே 3ல் தனது தந்தையை காணவில்லை என புகார் செய்தார். இதற்கிடையே சின்ன ஓவுலாபுரத்தில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ள எரசக்கநாயக்கனுார் மஞ்சள் நதி கண்மாய் அருகில் தண்ணீர் இல்லாத கிணற்றில், வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில் சந்திர வேல்முருகன் கிடந்தார்.உடலை மீட்ட ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சின்ன ஓவுலாபுரத்தை சேர்ந்த சந்திர வேல்முருகனின் உறவினர்கள் நிசாந்த் 26, நித்திஷ் 24, ஆகிய சகோதரர்களை கைது செய்தனர். முன் பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை