உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகாசி: சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட, வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம் போல், தொழிலாளர்கள் இன்று (ஜூலை 09) பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். தீயில் கருகி மாரியப்பன், முத்துவேல் ஆகிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lkz7hick&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=03 பேர் பலத்த காயமுற்று, சிகிச்சைக்காக, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பட்டாசு தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜூலை 09, 2024 20:59

இறந்தவர்களுக்கு இந்த விடியா திராவிடமாடல் அரசு பத்து லட்சம் கொடுக்க வேண்டும். கள்ள சாராயம் குடித்து செத்தவனுக்கு பத்து லட்சம் கொடுக்கும் ஸ்டாலின் சுய வேலை பார்த்து உழைத்து இறந்த அப்பாவி ஏழைகளுக்கு உடனே நிவாரண தொகை பத்து இலட்சத்தை கொடுக்க வேண்டும்.


hari
ஜூலை 09, 2024 12:55

அண்ணனுக்கு பத்து லட்சம் பார்சல்.... விடியல் மைண்ட்வொய்ஸ்


கூமூட்டை
ஜூலை 09, 2024 10:56

இதற்காக திராவிட முன்னேற்றக் மாடலிங். குற்றம் சாட்டக்கூடாது இது உயிரை பணயம் வைத்து தொழில் செய்து வருகிறார். ஓம் நமசிவாய.


மொட்டை தாசன்...
ஜூலை 09, 2024 10:52

தொடரும் இந்த பட்டாசு ஆலை விபத்துகளை உடனடியாக நிறுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.


ram
ஜூலை 09, 2024 16:31

தீபாவளி பொது வெடி வெடிக்கக்கூடாது என்று வழக்கு போட்ட ஒரு மதத்தினரின் வேலையா இது இருக்கும் போல, இதுபோல வெடி விபத்துகள் தொடர்ச்சியாக ஏற்பட்டால் இதை காரனம் காட்டி, நீதி மன்றம் மூலம் இதற்கு தடை வாங்குவதற்கு அவர்களுக்கு ஒரு காரணமாக இருக்கும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை