உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்: ஏற்க முடியாதது என்கிறார் கார்த்தி சிதம்பரம்

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்: ஏற்க முடியாதது என்கிறார் கார்த்தி சிதம்பரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான விதிமீறல். ஏற்றுக்கொள்ள முடியாதது' என சிவகங்கை தொகுதி எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார்.பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், பெண் போலீசாருக்கு எதிராகவும், போலீஸ் உயரதிகாரிகளுக்கு எதிராகவும், அவதூறு கருத்துக்களை தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ja3f5axm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மீண்டும் குண்டாஸ்

ரத்து உத்தரவு வெளியாகி இரண்டு நாட்களே ஆன நிலையில், சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட எஸ்.பி., பரிந்துரைபடி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க அந்த மாவட்ட கலெக்டர் உத்தவிட்டார். புழலில் இருந்து, சவுக்கு சங்கர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் கலெக்டரின் உத்தரவு சிறை நிர்வாகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டது.

அப்பட்டமான சட்டமீறல்

இந்நிலையில், எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை: சவுக்கு சங்கரின் பேச்சு அநாகரீகமானது. அவர் மிகைப்படுத்தல் மற்றும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார். எனினும் அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான விதிமீறல். ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசின் முடிவை நீதிமன்றம் ரத்து செய்வது இன்னொரு முறை நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிருப்தி

அவரது இந்த கருத்து, கூட்டணி கட்சியான ஆளும் தி.மு.க.,வினர் மத்தியிலும், ஆளுங்கட்சியை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் நிச்சயம் அதிருப்தியை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

theruvasagan
ஆக 13, 2024 18:41

அநாகரீக பேச்சுக்கு குண்டர் சட்டம் என்றால் அவங்க கட்சியில இருக்கறவங்களுக்கே புழல் பத்தாதே.


sri
ஆக 13, 2024 18:22

கார்த்தி சிதம்பரம் சொல்வதில் தவறேதும் இல்லை. பத்திரிகையாளர்களை அரசு எதிர் கொள்ள வேண்டும். அவர்களை சிறையில் போடவேண்டும், என்னும் எண்ணங்கள் தவறு


RAAJ68
ஆக 13, 2024 14:17

கார்த்தி சிதம்பரம் பிஜேபியில் சேர்ந்தால் அவரை மாநிலத் தலைவராக ஆக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. காயை நகர்த்தி பாருங்கள்.


RAAJ68
ஆக 13, 2024 14:16

பொய் வழக்கு போடும் காவல்துறையின் அராஜகத்தை ஆளும் கட்சி சன் டிவியில் ஒளிபரப்பாகும் புது வசந்தம் என்கிற தொடரில் பார்க்கலாம். ஆளும் கட்சி தொலைக்காட்சியிலேயே போலீசை தவறாக சித்தரிக்கிறார்கள். என்னதான் கதை என்று சப்பை கட்டு கட்டினாலும் போலீசுக்கு அவமதிப்பு தானே.


Rajagopalan Krishnan
ஆக 13, 2024 14:02

We welcome karthik ion


MOHAN N G AMMU
ஆக 13, 2024 13:58

கேனப்பய நாட்டில் கிறுக்கு பய நாட்டாமை நடப்பதால் இப்படித்தான் நடக்கும்


MOHAN N G AMMU
ஆக 13, 2024 13:57

கேனப்பய நாட்டில் கிறுக்கு பய நாட்டாமை நடப்பதால் இப்படித்தான் கிறுக்குத்தனமாக ஏதாவது செய்தார்கள்


subramanian
ஆக 13, 2024 13:07

திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டு அழிய பாடுபடுகிறது.


Muralidharan S
ஆக 13, 2024 13:05

சென்னை முழுவதும் கழிவு நீர் சாலையில் ஓடிக்கொண்டே இருக்கிறது. மழை நீர் வடிகால்களோ பாதாள சாக்கடைகளோ செயல்பாடாத நிலை.. நடைபாதை மற்றும் சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள் அரசியல் கட்சிகளின் ஆதரவில்.. குண்டு, குழிகள், பள்ளங்கள் நடுவுல ஆங்காங்கே சிறிது சாலைகள் பிரதான சாலைகள் கூட, இதே லக்ஷணம் .. இதற்க்கு யாரெல்லாம் பொறுப்போ, முதலில் அவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளே போட வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனம் இல்லை ...


subramanian
ஆக 13, 2024 13:03

என்னவோ தெரியல கார்த்தி சிதம்பரம் கருத்து நேர்மையான முறையில் சொல்லி விட்டார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை