உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்ட் பார்ட்டாக பஸ்களை பரிசோதிக்க அரசு உத்தரவு

பார்ட் பார்ட்டாக பஸ்களை பரிசோதிக்க அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு பஸ்களில் ஆய்வு மேற்கொண்டு, அடுத்த மூன்று நாட்களில் அவற்றை சீரமைக்க, போக்குவரத்து கழகங்களுக்கு தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். அரசு பஸ்களின் பராமரிப்பு பணி தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். பின், அரசு பஸ்களை ஆய்வு செய்து, 48 மணி நேரத்தில் அறிக்கை அளிக்குமாறு, போக்குவரத்து கழகங்களுக்கு, தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:தலைமை செயலரின் உத்தரவின்படி, தமிழகம் முழுதும் உள்ள 312 பஸ் பணிமனைகளிலும் நேற்று அதிகாலை முதல் பஸ்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐந்து ஆண்டுகளை கடந்துள்ள பஸ்களில் இருக்கைகள், மேற்கூரைகள், ஜன்னல், கதவுகள், படிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். இன்று காலைக்குள் இந்த ஆய்வுப் பணியை முடித்து, பழுதுள்ள பஸ்களில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இதை அறிக்கையாக தயாரித்து, அரசிடம் அளிக்க உள்ளோம். நீண்ட துாரம் செல்லும் வழித்தட பஸ்களை விட, மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்களில் இயக்கப்படும் பழைய பஸ்கள் இன்னும் ஓரங்கட்டப்படாமல் உள்ளன. அன்றாட பராமரிப்பு பணி மேற்கொண்டாலும், சில நேரங்களில் விபத்தில் சிக்குகின்றன. பராமரிப்பு பணி, உதிரிபொருட்களின் செலவும் அதிகரித்து வருவதால், பழைய பஸ்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவது தான் சரியான வழியாக இருக்கும். புதிய பஸ்கள், மின்சார பஸ்கள் வாங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என, தலைமை செயலரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Kuppan
ஏப் 30, 2024 17:51

செக் பண்ணா திரும்ப ஒரு முழு பஸ்-ஆ ஆகாது பேரிச்சம் பழத்துக்கு தான் ... பேரிச்சம் பழ வியாபாரிகளுக்கு அடித்தந்து யோகம்

theruvasagan
ஏப் 28, 2024 22:02

பார்ட் பார்ட்டா கழட்டி வித்து ஏப்பம் விட்டாச்சு. அப்புறம் எந்த பார்ட்டை சோதிப்பாங்களாம்.

Gowtham Saminathan
ஏப் 28, 2024 22:02

யோவ் அதுல சோதிக்க என்னய்யா இருக்கு... வே-ப்ரிட்ஜ் ல எடையை போட்டு உடைக்க வேண்டியது தான்..

தமிழ்வேள்
ஏப் 28, 2024 20:16

அரசு போக மட்டுமே தனது ஊழியர்கள் மூலம் முன்பு போல் கூண்டு கட்டவேண்டும் அல்லது பஸ் அடிச்சட்ட உற்பத்தி நிறுவனங்களே கட்டித்தரும் தரமான கூண்டு உடைய வண்டிகளை வாங்கி பதிவு செய்யப்பட்ட பின்னர் நேரடியாக சர்வீஸில் இறக்கி விடவேண்டும் ஆளும் கட்சி ஆட்களின் பினாமி கூண்டு கட்டும் நிறுவனங்களில் தான் பிரச்சினைகள் துவங்குகின்றன கோளாறு மாநில அரசின் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் இடம் மட்டுமே

ஆரூர் ரங்
ஏப் 28, 2024 20:11

பரிசோதனை துவக்க விழாவை ஸ்டாலின் துவக்கி வைப்பார். அதற்காக உள்ளதிலேயே பழைய பேருந்தின் நடத்துனர் இருக்கையில் அமர்ந்து பயணிப்பார்.

Anantharaman Srinivasan
ஏப் 28, 2024 13:17

பேரீச்சம்பழம் பேரீச்சம்பம் ஓட்டை உடைச்சலுக்கு பேரீச்சம்பழம் வேறு மாநிலதௌதில் FC க்கு போனால் ஒரு பஸ் கூட தேறாது

sridhar
ஏப் 28, 2024 13:05

சுலபம் தான் பஸ் எல்லாம் பார்ட் பார்ட்டா தான் கிடக்கு

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 28, 2024 12:39

புது வண்டி வாங்க காசு இல்ல

மேலும் செய்திகள்

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை