உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுப்பதிவுக்காக சம்பளத்துடன் விடுப்பு அளிக்க அரசு உத்தரவு

ஓட்டுப்பதிவுக்காக சம்பளத்துடன் விடுப்பு அளிக்க அரசு உத்தரவு

மதுரை: லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டுப்பதிவு நாளில் பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஓட்டுப்பதிவு செய்யும் வகையில், அவர்களுக்கு பிடித்தம் ஏதுமின்றி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும்.அவரது பணியிடம் ஒரு தொகுதியில், இருப்பிடம் ஒரு தொகுதியில் இருந்தாலும் விடுப்பு வழங்க வேண்டும்.அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்க மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் யாஸ்மின் பேகம் வழிகாட்டுதல்படி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஒருங்கிணைப்பு அலுவலர் (நோடல் ஆபீசர்) தலைமையில் 3 சார் நிலை அலுவலர்கள் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.மதுரையில் உதவி ஆணையர் கார்த்திகேயன் (94453 98761), துணை ஆய்வாளர் விமலா (99425 41411), கண்காணிப்பாளர் சரவணன் (63813 43552), ராமநாதபுரத்தில் மலர்விழி (94453 98764), பரமக்குடி உதவியாளர் முனியசாமி (86087 72646), இளநிலை உதவியாளர் ஜோதி முருகன் ( 85259 73357), சிவகங்கையில் உதவி கமிஷனர்கள் முத்தம்மாள் (94453 98767), வெங்கடேஸ்வரன் (94426 13330) ,ராஜேஸ்வரி (86080 53352), விருதுநகரில் உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி (94453 98763), துணை ஆய்வாளர் சதாசிவம் 89398 62505), மணிகண்டன் 91594 43377) நியமிக்கப்பட்டுள்ளனர். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஏப் 19, 2024 05:44

ஓட்டுப்போடாமல் டிமிக்கி கொடுத்து சுற்றுலா செல்பவர்களை/ சீரியல் பார்ப்பவர்களை என்ன செய்வது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி


Ramu, Cbe
ஏப் 19, 2024 05:13

We hope people will do the right decisions in this election and everyone should vote to fulfil their rights.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை