மேலும் செய்திகள்
போலி மருந்துகள் குறித்து புகாராளிக்க க்யூ ஆர் குறியீடு
6 minutes ago
நா.த.க., சார்பில் சவுராஷ்டிரா மாநாடு
15 minutes ago
கையெழுத்து பெற்றும் ரேஷன் வழங்கலாம்; தாயுமானவர் திட்டத்தில் சலுகை
26 minutes ago | 1
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக பணிபுரிந்தவர், கீழத்துாவல் முனியசாமி, 37. இவர் ராமநாதபுரம், முதுகுளத்துார் கருவூலத்தில் ஓய்வூதியர்கள் கணக்கில் இருந்த, 1.89 கோடி ரூபாயை கருவூல ரகசிய குறியீட்டை பயன்படுத்தி கையாடல் செய்தார். இந்த முறைகேடு, தணிக்கையில் தெரியவந்தது.மாவட்ட கருவூல அலுவலர் சேஷன், இது குறித்து புகார் செய்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். முனியசாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் போலீசார் இந்த வழக்கில் முனியசாமியுடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் குறித்தான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். கையாடல் குறித்து கண்டறிந்த தணிக்கை குழுவினர் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.நேற்று, போலீசார் முன் தணிக்கை குழுவினர் 6 பேர் ஆஜராகினர். அவர்களிடம் முனியசாமி கையாடல் குறித்து விபரங்களை கேட்டறிந்து பதிவு செய்தனர். இவ்வழக்கில் விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.
6 minutes ago
15 minutes ago
26 minutes ago | 1