உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்ன, பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு: எல்.முருகன் சொன்ன விதம் பாருங்க!

என்ன, பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு: எல்.முருகன் சொன்ன விதம் பாருங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: 'உதயநிதி துணை முதல்வரானால், தமிழக மக்களுக்கு இன்னும் தீங்கு அதிகமாகும்' என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: பிரதமர் மோடி வரலாற்று மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்று சிறப்புமிக்க ஆட்சி அமைத்துள்ளார். நாட்டை பிரதமர் மோடி வேகமான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வேகம் மிக அதிகம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=voi5e0dz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பாதுகாப்பு

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தன்று தேசியகொடி ஏற்றாததை மிகப்பெரிய தவறான செயலாக நான் பார்க்கிறேன். இதை பா.ஜ., வன்மையாக கண்டித்து உள்ளது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. மாநில அரசு டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உதயநிதி துணை முதல்வரா?

உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்று தி.மு.க., அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்துவது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, '' இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் தமிழகத்தின் துணை முதல்வராக வருவதால், ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது. தமிழகத்தின் அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு என்னென்ன தீங்கு செய்து வருகிறார்களோ அது இன்னும் அதிகமாகும்'' என எல்.முருகன் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

MADHAVAN
ஆக 21, 2024 11:33

ஒட்டு ப்படி வந்த உனக்கு என்ன? உங்க பிஜேபி கு வந்த ஒட்டு எப்படினு மக்களுக்கு தெரியாதா ?


james arul rayan
ஆக 20, 2024 17:15

எல். முருகன் அமைச்சராக இருப்பதால் யாருக்கு என்ன நன்மை என்று யாருக்கும் தெரியாது.


D.Ambujavalli
ஆக 20, 2024 16:53

இப்போதே அவர் நிழல் முதல் அமைச்சராகவே செயல்படுகிறார் துறை அமைச்சர் இருக்கையில் வெள்ளச் சேதாரம், கள்ளச்சாராய மரணத்துக்கு விசிட், என்று அவரைத் தூக்கி வைத்திருக்கிறார்கள் யார் எக்கேடு கெட்டால் என்ன என்று நகரின் மத்தியில் கொடிகளைக்கொட்டி கார் ரேஸ் என்று தானே ராஜா மனசே மந்திரி என்று தானே இருக்கிறார் புதிதாக என்ன கெடுதி வரப்போகிறது


Narayanan Muthu
ஆக 20, 2024 13:39

அப்பப்ப தன் இருப்பை காட்டிக்கொள்வார் இப்படி. மற்றபடி இருக்கும் இடம் தெரியாம இருந்துக்கணும்ங்கிற கொள்கை கொண்டவர்.


Rajathi Rajan
ஆக 20, 2024 13:10

அதுதான் காலக்கொடுமை, கலிகாலம்...


Narayanan
ஆக 20, 2024 12:48

தகுதிவாய்ந்த பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அது என்ன தகுதியோ அந்த அத்தகுதியை ஏன் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு வைக்க வில்லை? ஆயிரம் ரூபாய் மாணவிகளுக்கு கொடுத்துவிட்டு அதற்க்கு துறை முருகனின் விளக்கம் காதல் செய்ய போன் பயன்படுத்தவும் , சினிமாவிற்கு அவர்களின் துணையுடன் போகவும் கொடுத்தாக சொன்னார் . இப்போ மாணவர்களுக்கும் ரூபாய் ஆயிரமாம் . அவர்கள் கஞ்சா வாங்கவும் , சாராயம் குடிக்கவும் , சிகரட் புகைக்கவும் கொடுக்கிறார்கள் . தமிழக சீர்கெட்டுக்கொண்டு இருக்கிறது . மக்கள் உணரவேண்டும் .


Ramesh Sargam
ஆக 20, 2024 12:16

தீங்கு அதிகமானால், மக்கள் பொறுமையை இழந்து கலவரத்தில் ஈடுபடுவார்கள். அப்புறம் பங்களாதேஷ் நிலைமைதான். தயவுசெய்து வேண்டாம் அந்த நிலைமை தமிழகத்தில். தயவுசெய்து உதய நிதி துணை முதல்வர் ஆகவேண்டாம்.


Ravi Ganesh
ஆக 20, 2024 13:16

பிஜேபி காரங்க எல்லாம் கருணாநிதி நாணயம் வெளியீட்டுக்கு ஓடிப் போய் திமுக வுக்கு முறைவாசல் செய்தார்களே. அப்போ பிங்கி எழ வேண்டியது தான்.


Sampath Kumar
ஆக 20, 2024 11:36

முருகன் தான் அடுத்த பிஜேபி முதல்வர் வேட்பாளர் அதுனால இப்போவே சீன காட்டுகிறார்


gopal
ஆக 20, 2024 11:30

நீ ஒரு சிறந்த ...


Narayanan Muthu
ஆக 20, 2024 13:36

ஜோக்கர்


RAMAKRISHNAN NATESAN
ஆக 20, 2024 14:32

ஜோக்கர் ???? அப்பதவியை புலிகேசி மன்னர் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார் ......


RAAJ68
ஆக 20, 2024 11:26

உதயநிதி துணை முதல்வர் ஆகக்கூடாது என்று கனிமொழி போர்க்கொடி தூக்கி உள்ளார் தனக்குத்தான் அந்தப் பதவி வேண்டும் என்று குடும்பத்தில் ஒரே குழப்பம் சண்டை.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ