மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
53 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
53 minutes ago
சென்னை: 'தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழை; எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.இன்று கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை; நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கொடைக்கானல் படகு குழாமில் 6 செ.மீ., மழை; மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 5 செ.மீ., மழையும் பதிவானது.சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு உத்தரவுதமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழை; 13 மாவட்டங்களில் கனமழை; நாளை எட்டு மாவட்டங்களில், நாளை மறுதினம் 14 மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், பேரிடரை கையாள வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், 22 மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் இம்மாதத்தில் நேற்று வரை, மழைக்கு இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் இறந்துள்ளனர். இவர்களில் ஐந்து பேர் மின்னல் தாக்கியும், ஒருவர் மரம் விழுந்தும், ஒருவர் சுவர் இடிந்தும் இறந்துள்ளனர். மழையில், 13,500 கோழிகள், 71 கால்நடைகளும் இறந்துள்ளன. மேலும், 217 குடிசைகள், 85 வீடுகள் பகுதியாகவும், 16 குடிசைகள், ஆறு வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
53 minutes ago
53 minutes ago